போற இடமெல்லாம் ஒரு பொண்டாட்டி! மொத்தம் 22 மனைவிகள், 22 குடும்பங்கள்! சினிமாவை மிஞ்சிய பகூலேயனின் திடுக்கிடும் பின்னணி!!!



kerala-man-married-22-women-fraud-arrested

சினிமா கதையை மிஞ்சும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான மோசடி சம்பவம் கேரளாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பல போலிப் பெயர்களில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதுடன், அவர்களைப் பராமரிக்க கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டதாக கூறப்படும் பகூலேயன் என்ற நபரின் செயல் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

22 பெண்களை ஏமாற்றிய திருமணம்

கேரளாவின் வட்டியூர்க்காவு பகுதியைச் சேர்ந்த 56 வயதான பகூலேயன், தாஸ், பாபு, சுந்தரன் உள்ளிட்ட பல பெயர்களில் வலம் வந்து பெண்களை ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கணவனை இழந்தவர்கள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களை இலக்காகக் கொண்டு, அவர்களை திருமணம் செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொய்யான அடையாளம், கொள்ளைச் சம்பவங்கள்

ஒவ்வொரு மனைவியிடமும் தன்னை அரசு அதிகாரி அல்லது பெரிய தொழிலதிபர் என கூறி நம்ப வைத்திருந்தார். பின்னர் அவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க, திருட்டு நகைகள் உள்ளிட்ட பொருட்களை பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பல குடும்பங்களை யாருக்கும் தெரியாமல் நிர்வகித்து வந்தது போலீசாரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: ச்சீ... காமத்தின் உச்சம்! பிணத்தை கூட விட்டு வைக்காத வாலிபர்! பிணவறையில் பெண்ணின் சடலத்திடம் செய்த அருவருப்பான செயல்!

CCTV மூலம் சிக்கிய குற்றவாளி

சமீபத்தில் திருவனந்தபுரம் அருகே நடந்த நகை பறிப்பு சம்பவத்தில், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களின் அடிப்படையில் போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது கேரளா முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

பலமுறை சிறைக்குச் சென்றிருந்தாலும், வெளியே வந்தவுடன் மீண்டும் இதே போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள பகூலேயன் மீது திருட்டு மற்றும் மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சினிமாவை நினைவூட்டும் இந்த மணமுறை மோசடி சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: ஒரே மாதத்தில் 3 முறை விற்பனை... ஒவ்வொரு நிமிடமும் செத்து பிழைத்தேன்! 21 வயது பெண்ணுக்கு நடந்த நரக வேதனை..... பகீர் கிளப்பும் சம்பவம்!!!