Video: நடுரோட்டில் ஸ்கேட்டிங் ஓட்டிய இளைஞர்! நொடியில் பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்ட இருவர்! பதைப்பதைக்கும் வீடியோ...
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வரும் வீடியோ ஒன்று பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது பொதுமக்கள் பயன்படுத்தும் ஹைவேயில் அபாயகரமான ஸ்டண்ட் ஒன்றை செய்யும் இளைஞரை பற்றியது.
வீடியோவில், ஒரு இளைஞர் ஸ்கேட்போர்ட் மீது சாலையின் நடுவே பயணிக்கிறார். அந்த நேரத்தில் எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் அந்த இளைஞருடன் மோதுகிறது. மோட்டார் சைக்கிளின் முன்பகுதி நேரடியாக இளைஞரின் கழுத்தில் மோதியதால், அவர் தூக்கி வீசப்படுகிறார். அதே நேரத்தில் சைக்கிள் ஓட்டியவரும் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுகிறார்.
இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட வீடியோ
இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ “razz_gupta_1679” என்ற Instagram கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த பலர் சமூக வலைதளங்களில் தீவிர விமர்சனங்களை எழுப்பியுள்ளனர்.
நெட்டிசன்களின் கண்டனமும் கோரிக்கையும்
இந்த வீடியோவுக்கு எதிராக பலர் கடுமையான கருத்துகளை பதிவு செய்துள்ளனர். "இவனுக்கு உயிர் மதிப்பே இல்லை", "மனநிலை சரியில்லை போல, இப்போ உடலும் சரியில்லை" போன்ற கருத்துகள் பரவி வருகின்றன.
பொது இடங்களில் அபாயகரமாக ஸ்டண்ட் செய்வது பற்றிய கவலையும் அதிகரித்துள்ளது. இத்தகைய உயிருக்கு அபாயம் ஏற்படும் செயல்கள் குறித்தும், அதனைச் செய்தவர்களுக்கு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேகமாக ஸ்கூட்டியில் சென்ற பெண்கள்! நொடியில் நடுரோட்டில் தாறுமாறாக விழுந்த பெண்கள்! என்ன காரணம்னு பாருங்க! வைரலாகும் வீடியோ...