தயாரிப்பாளர் மகளின் ரிசப்ஷனில் தளபதி விஜய்.. திருமண ஜோடிக்கு வாழ்த்து.!



Actor Vijay Attends Film Producer Siva’s Daughter Wedding Reception

திரைப்படத் தயாரிப்பாளர் சிவாவின் மகள் திருமண ரிசப்ஷனில் விஜய் நேரில் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை தீவிரபடுத்தியிருக்கிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கு அவர் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கரூர் பகுதிகளில் மக்கள் சந்திப்பும் நடைபெற்றது. 

ஈரோட்டில் பொதுக்கூட்டம்:

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அவரது பரப்புரை பயணங்கள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்ட உள்ளரங்க கூட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் அவர் பேசியிருந்த நிலையில், தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சதி செய்ய நிறைய பேர் உண்டு! ஆனால் எங்க அண்ணா அப்படி கிடையாது! 20 வருடத்திற்கு பிறகு விஜய்க்காக வீடியோ வெளியிட்ட தங்கச்சி...

தயாரிப்பாளர் சிவா மகள் திருமண ரிஷப்ஷன்:

இதனிடையே திரைப்படத் தயாரிப்பாளர் சிவா அவர்களின் மகள் திருமணத்தில் விஜய் கலந்து கொண்டுள்ளார். தம்பதிகளை ரிசப்ஷனில் நேரில் கலந்து கொண்டு விஜய் வாழ்த்தியது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: வணக்கம் அவுங்களுக்கு.... ஆனால் வாக்கு விஜய்க்கு போடுங்க! உசுப்பேத்தி உற்சாக படுத்திய செங்கோட்டையன்! அனல் பறக்கும் அரசியல் கலம்!