அட.. நடிகை சுனைனாவின் காதலர் இவர்தானா?? தீயாய் பரவும் நெருக்கமான புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. முதல் படத்திலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சுனைனா மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், ரெஜினா, சில்லுக்கருப்பட்டி, தொண்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சினிமா துறையில் சுனைனா
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் வெப் சீரிஸில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் அவர் நிலா நிலா ஓடி வா, பிங்கர்டிப், சதுரங்கம், மீட் க்யூட், இன்ஸ்பெக்டர் ஆகிய வெப் தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சுனைனாவிற்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவரது காதலர் குறித்தும் பல தகவல்கள் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது.
காதலருடன் நெருக்கமாக புகைப்படம்
இந்த நிலையில் நடிகை சுனைனா தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் என ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் காலித் அல் அமெரி. பிரபல UAE சமூக ஊடக இன்புளுயன்சர். அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய காலித் அல் அமெரி சுனைனாவின் கையைப பிடித்து இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் அவர்தான் சுனைனாவின் காதலர் என கூறி வருகின்றனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
