Video : ஈரோட்டை அதிரவைத்த விஜய்யின் ‘மாஸ்’ செல்ஃபி! வீடீயோவை வெளியிட்ட விஜய்! இணையத்தில் செம வைரல்!
ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியான பொதுக்கூட்டம் அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், அந்த நிகழ்வின் பிந்தைய தருணம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
ஈரோடு மேடையில் கலகலப்பு தருணம்
இன்று (டிசம்பர் 18, 2025) ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றிய விஜய், உரை முடிந்ததும் திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களை நோக்கி "ஒரு செல்ஃபி எடுக்கலாமா?" என கேட்டு கலகலப்பை ஏற்படுத்தினார். பின்னர் தனது கைப்பேசியில் செல்ஃபி வீடியோ பதிவு செய்யத் தொடங்கினார்.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த விஜய், "Thank you Erode" (நன்றி ஈரோடு) என பதிவிட்டு மக்களுக்கு நன்றியையும் தெரிவித்தார். வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த வீடியோ லட்சக்கணக்கான லைக்குகள், கருத்துகளை குவித்து வைரல் ஆனது.
இதையும் படிங்க: பயங்கர தள்ளுமுள்ளு... போலீஸ் கையை கடித்து குதறிய தவெக தொண்டர்! பரபரப்பு வீடியோ!
டிரெண்டிங்கில் முதலிடம்
தொண்டர்களுடன் விஜய் பகிர்ந்த அந்த நெருக்கமான தருணம், அரசியல் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு கூட்டம் மட்டுமல்ல, விஜயின் மக்கள் தொடர்பும் மீண்டும் ஒரு முறை டிரெண்டிங் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஈரோடு பொதுக்கூட்டத்தின் இந்த சிறிய செல்ஃபி தருணம் கூட, விஜயின் அரசியல் பயணத்தில் மக்கள் ஆதரவு எவ்வளவு வலுவாக உள்ளது என்பதை வெளிப்படுத்தும் இன்னொரு அடையாளமாக பார்க்கப்படுகிறது.