வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடித்திருந்த ரஞ்சனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அதனை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படம் தேரே இஷ்க் மெய்ன்'.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு
இப்படத்தில் தனுஷ் ஜோடியாக, ஹீரோயினாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தேரே இஷ்க் மெய்ன் இந்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூலை வாரி இறைத்து வருகிறது.

பாக்ஸ் ஆபீஸ் சாதனை
இந்நிலையில் தேரே இஷ்க் மெய்ன்
படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிய நிலையில் இதுவரை படைத்துள்ள பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவல்கள் பரவி வருகிறது. அதாவது படம் வெளியாகி 10 நாட்களிலேயே 130 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் விரைவிலேயே படம் 150 கோடியை வசூல் செய்து சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.