குழந்தையிடம் அந்தரங்க அத்துமீறல்!10 ஆண்டுகளாக 4 வயது சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை... தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பகீர் பின்னணி..!!!
இங்கிலாந்தில் 4 வயது சிறுமியை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட கேரி நியூவில்லுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாயை திருமணம் செய்துகொண்ட அவர், தாயார் இல்லாத நேரங்களைப் பயன்படுத்தி குழந்தையைத் தொடர்ந்து துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மை வெளிச்சத்துக்கு வந்த நிலையில், பிரைட்டன் கிரவுன் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
தாயாருக்கு தெரியாமல் தொடர்ந்த கொடுமை
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன், 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் மூலம் கேரி நியூவில்லுவை சந்தித்தார். அப்போது 60 வயதாக இருந்த அவரை திருமணம் செய்துகொண்ட ஆட்ரி, குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்வார் என நம்பியதாக கூறப்படுகிறது.
ஆனால், தாயார் வேலைக்குச் சென்ற நேரங்களை பயன்படுத்திக் கொண்ட கேரி நியூவில், அவரது மகள் சாராவை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு விசாரணையில் தெரியவந்தது. சிறுமிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பல ஆண்டுகளாக தொடர்ந்ததாகவும், குழந்தை வளர்ந்த பிறகும் அதன் தாக்கம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 வயதில் வெளிப்பட்ட அதிர்ச்சி உண்மை
தொடர்ந்து ஏற்பட்ட கொடுமைகளை தாங்க முடியாமல் சாரா தனது 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் 16 வயதில் பள்ளித் தோழியிடம் நடந்தவற்றை கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து தோழியின் பெற்றோர் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் கேரி நியூவில்லுவை கைது செய்தனர். வழக்கு விசாரணை பிரைட்டன் கிரவுன் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது.
22 ஆண்டுகள் சிறை தண்டனை
13 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கேரி நியூவில்லுக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு பேசிய பாதிக்கப்பட்ட சாரா, இனி அவரை வெளியே பார்க்க வேண்டிய நிலை இருக்காது என்பதால் தனக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.