கோவிலில் ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்த 84 புலிகள்! அதிர்ச்சி சம்பவம்!

கோவிலில் ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்த 84 புலிகள்! அதிர்ச்சி சம்பவம்!


tigers died in temple


தாய்லாந்து நகரம் பாங்காக்கின் மேற்கு பகுதியிலுள்ள காஞ்சனாபூரி என்ற இடத்தில் ஒரு புத்தர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் வன வளாகத்தில் நூற்றுக்கணக்கான புலிக்குட்டிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதனால் இந்த கோவிலை புலிக்கோவில் என்றும் அழைப்பார்கள். 

பல பகுதிகளில் இருந்து அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் புலிகளோடு புகைப்படம் எடுத்து கொள்வது வழக்கம். இந்த நிலையில், அங்கு புலிகள் கடத்தப்படுவதாகவும், சுற்றுலா பயணிகளிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு புலிக்குட்டிகளை மருந்து பொருள் தயாரிப்பதற்கு விற்பதாகவும் தகவல்கள் பரவியது.

இதனையடுத்து மூன்று வருடங்களுக்கு முன்பு அதிகாரிகள் அந்த கோவில் வன வளாகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவிலில் இருந்த ஒரு குளிர்சாதன பெட்டியில் பல புலிக்குட்டிகளின் சடலங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

tigers

இதனையடுத்து கோவிலில் இருந்து 147 புலிகள் மீட்கப்பட்டு அருகில் இருக்கும் ரட்சபுரி மாகாணத்தில் உள்ள 2 இனப்பெருக்க நிலையங்களுக்கு கொண்டு சென்று பராமரித்துள்ளனர். 

வனத்துறை அதிகாரிகள் மீட்கப்பட்ட புலிகளில் 86 புலிகள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக இறந்துவிட்டதாகவும், 61 புலிகள்தான் உயிர்பிழைத்து இருப்பதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். 86 புலிகள் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக இறந்த தகவலை அறிந்த சுற்றுலாப்பயணிகள் பெரும் சோகம் அடைந்தனர்.