வங்கியில் கொள்ளையடித்த பணத்தை நாலாபக்கமும் வீசியெறிந்த முதியவர்! இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்!



old-man-through-money-in-out-side

கிறுஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு முதியவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கொலோராடோ ஸ்பிரிங் பகுதியில் உள்ள அகாடெமி வங்கியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அண்மையில் கொள்ளையடித்துள்ளார். அந்த முதியவர் ஆயுதத்தை பயன்படுத்தி இந்தக் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியுள்ளார். அதன்பின் கொள்ளையடித்த பணத்தை நாலா பக்கமும் தூக்கி வீசி எறிந்தபடி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த மக்களும் உற்சாகம் அடைந்தனர். மக்களும் இன்ப அதிர்ச்சியில் அவருக்கு பதில் வாழ்த்து தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், வங்கியில் பணத்தைக் கொள்ளை அடித்த பணம் முழுவதையும் வீசிய பின், ஒரு கடைக்கு சென்றார். அபோது அங்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 

ஆனால் அங்கு காவல்துறையினர் வருவதை பார்த்து அந்த முதியவர் தப்பியோட முயற்சிக்கவில்லை. விசாரணையில் முதியவரின் பெயர் டேவிட் வெய்ன் ஆலிவர் என்பது மட்டும் தெரியவந்தது. எதற்காக கொள்ளையடித்தார், அந்த பணத்தை ஏன் வீதியில் வீசினால் என்று தெரியவில்லை என தெரிவித்தார்.