விஞ்ஞானிகளின் புதிய கண்டுப்பிடிப்பு! பூமியிலிருந்து வெளியேறும் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம்!



gold-rising-from-earths-core

பூமியின் ஆழம் என்னும் புதிரில் புதைந்திருந்த விலைமதிப்பற்ற உலோகங்கள் குறித்து புதிய அறிவியல் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, பூமியின் மையத்தில் தான் தங்கம் போன்ற உலோகங்கள் அடங்கியுள்ளன என நம்பப்பட்ட நிலையில், அவை மெதுவாக மேற்பரப்பை நோக்கி நகர்கின்றன என்று விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.

புதிய கண்டுபிடிப்பு

இந்த அதிர்ச்சியூட்டும் விஞ்ஞான தகவல் ஜெர்மனியின் கோட்டிங்கன் பல்கலைக்கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் வெளிவந்தது. ஆராய்ச்சியாளர் நில்ஸ் மெஸ்லிங் தலைமையில் நடந்த இந்த ஆய்வில், ஹவாயி தீவுகளில் உள்ள கிலாவேயா எரிமலை பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட பாறை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டது.

அந்த பாறைகளில் காணப்பட்ட ருத்தேனியம் எனும் அரிய உலோகம் மிக அதிக அளவில் இருந்தது. இது, அந்த உலோகங்கள் பூமியின் மையம் மற்றும் மேன்டில் இடையே உள்ள பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என்பதை உறுதி செய்கிறது. மேன்டிலில் இயல்பாக உள்ள ருத்தேனியம் அளவைக் காட்டிலும், இம்மாதிரிகளில் காணப்பட்ட அளவு மிக அதிகமாக இருந்தது.

இதையும் படிங்க: Breaking: திடீரென இடிந்து விழுந்த பாலம்! நதியில் விழுந்த கார், லாரியால் 2 பேர் பலி! தொங்கியபடியே உள்ள வாகனம்! அதிர்ச்சி வீடியோ..

பூமியின் உள் இயக்கங்கள் பற்றிய புரிதல்

இந்த கண்டுபிடிப்பு மூலம், புவி வேதியியல் சுழற்சி குறித்து விஞ்ஞானிகள் புதிய புரிதலுக்கு வந்துள்ளனர். பூமியின் மூன்று அடுக்குகள் — மேலோடு, மேன்டில் மற்றும் மையம் — தொடர்ந்து இயக்கத்தில் இருப்பதையும், அந்த இயக்கங்கள் தங்கம் மற்றும் பிற உலோகங்களை மேற்பரப்புக்கு கொண்டு வரக்கூடியவை என்றும் இதனால் தெரியவந்துள்ளது.

உலகத்தரமான அறிவியல் இதழில் வெளியான தகவல்

மே 21ஆம் தேதி, இந்த ஆய்வு Nature எனும் உலகத் தலைசிறந்த அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது, பூமியின் உள் செயல்முறைகள் குறித்த மனிதனின் அறிவை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

 

 

இதையும் படிங்க: மிருகக் காட்சியில் தவறி விழுந்த குழந்தை! குழந்தையை மெல்ல தூக்கி தாயிடம் ஒப்படைத்த கொரில்லா! நெகிழ வைக்கும் வீடியோ...