Video : இரவில் தெருவில் நடந்து சென்ற பெண்ணை வேகமாக ஓடிவந்து முட்டி தூக்கி வீசி காளை! இறுதியில் மார்பில் மிதித்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி!



street-cow-attack-sambhal-viral-cctv

 உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தெருவில் நடந்து சென்ற ஒரு பெண்ணை திடீரென தாக்கிய தெரு காளை குறித்த வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிசிடிவியில் பதிவு செய்யப்பட்ட கொடூர காட்சி

இந்த கொடூர சம்பவம் சாலை ஓரமாக பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. வீடியோவில், இரவு நேரத்தில் உணவுக்குப் பிறகு வீட்டிற்குத் திரும்பிய அந்தப் பெண், திடீரென பின்னால் வந்த காளையால் தாக்கப்பட்டதை காணலாம். காளை கொம்புகளால் தூக்கி தரையில் வீசப்பட்டதுடன், தொடர்ந்து பலமுறை காலால் மிதித்து தாக்கியது.

இந்த தாக்குதலால் பெண்ணுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருடைய ஒரு கையில் எலும்பு முறிவு, மார்புப் பகுதியில் ஆழமான உள் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீடியோவில் அவர் வலியால் துடிக்கின்றார். அருகிலிருந்தவர்கள் ஒலியெழுப்பி காளையை விரட்டியடித்து, உடனடியாக அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: இந்திய வம்சாவளியை சேர்ந்த மொத்த குடும்பமும் தீயில் கருகி நொடியில் பலியான சோகம்! பெரும் அதிர்ச்சி சம்பவம்....

மருத்துவர்கள் கூறுகையில், “பெண் தற்போது ஆபத்திலிருந்து மீண்டுள்ளார். மருத்துவ சிகிச்சை தொடரவேண்டும். பிளாஸ்டர் போடப்பட்டுள்ளது. ஓய்வும் அவசியம்” என தெரிவித்துள்ளனர்.

நகராட்சிக்கு எதிராக பொதுமக்கள் கோபம்

இந்த சம்பவத்துக்குப் பின்னர், நகராட்சியின் அலட்சிய செயல் குறித்து மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். “தெருவில் சுற்றும் காளைகள், நாய்கள், மாடுகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. ஆனால் நகராட்சி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியிருப்பதாகவும், நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது, சம்பவம் நடந்த பகுதியில் நகராட்சி விலங்குகளை பிடிக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

---

இதையும் படிங்க: 10 வருஷமா குழந்தை இல்ல! பெண்ணுக்கு பேய் ஓட்டினால் குழந்தை பிறக்கும்! கழிவுநீர் மற்றும் கழிப்பறை நீரால் மந்திரவாதி செய்த அதிர்ச்சி செயல்! பகீர் சம்பவம்....