இவர் தான் நடிகர் அப்பாஸா? இளசுகளை கட்டிப்போட்ட அப்பாஸ் ஆளே மாறிப்போய் இப்போ எப்படி இருக்காரு பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள்...



tamil-actor-abbas-latest-life-update

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக இருந்த அப்பாஸ், இப்போது எப்படி வாழ்கிறார் என்பது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது தற்போதைய வாழ்க்கைமுறை மற்றும் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன

1996ம் ஆண்டு தமிழ் திரையுலகில் பயணத்தைத் தொடங்கிய அப்பாஸ், 2015 வரை பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்தார். ஐஸ்வர்யா ராய், சினேகா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்த அனுபவமும் அவருக்கு உள்ளது.

நடிகர் அப்பாஸ்

இடைஇடையே வெற்றியும், தோல்வியும் சந்தித்த அப்பாஸ், ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து, சினிமாவிலிருந்து விலகிவிட்டார். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி பெரிய நடிகராக நிலைநிறுத்த முடியாமல் போனார்.

இதையும் படிங்க: வாழ்க்கையை உணர விரும்பினால் நீங்கள் இதை செய்யுங்க! எதை இழந்து வருகிறோம் என்பது புரியும்! பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா புகழாரம்...

திருமணத்துக்குப் பின் வாழ்க்கை மாற்றம்

திருமணத்துக்குப் பிறகு அப்பாஸ், நியூசிலாந்தில் செட்டில் ஆனார். அங்கு அவர் டாக்ஸி டிரைவர் வேலை மற்றும் சில ஷூட்டிங் சம்பந்தமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது மனைவி ஈரம் ஹுசைன் கான் ஒரு புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளராக திரையுலகில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

சமீப காலமாக அப்பாஸ், மன அழுத்தத்தில் இருக்கும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக மாற்றமடைந்துள்ளார். நேர்காணல்களில் கலந்து கொள்வதுடன், வாழ்வின் உன்னத பாதையை பகிர்ந்து வருகிறார்.

வைரலாகும் புதிய புகைப்படங்கள்

அப்பாஸின் புதிய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், "இவர் தான் அப்பாஸா?" என்ற அளவிற்கு அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் எனக் கூறுகின்றனர். சிலர், “இவர் விஜய்யைப் போல இருக்கிறார்” என்ற கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

இணையவாசிகள் வியப்புடன், “இது அப்பாஸுன் ரீஎண்ட்ரியா?” என பதிவிட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்...

நடிகர் அப்பாஸ்

நடிகர் அப்பாஸ்நடிகர் அப்பாஸ்

 

இதையும் படிங்க: திருமணத்துக்குப் பிறகும் ஸ்டைலிஷ் லுக்.. வெள்ளை நிற ஆடையில் கீர்த்தி சுரேஷின் மின்னும் புகைப்படம் வைரல்!?