உலகம்

அம்மா வேகமா ஒடுங்க..! மகனின் எச்சரிக்கையால் நொடிப்பொழுதில் உயிர்பிழைத்த தாய்..! வைரல் வீடியோ.!

Summary:

Mom narrowly escapes being crushed when tree crashes down

பெண் ஒருவர் நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் இருந்த மரம் ஒன்று நேராக அந்த பெண் அமர்ந்திருந்த நாற்காலியில் விழுந்ததும், அந்த பெண் நொடி பொழுதில் உயிர்ர்பிழைத்த சம்பவமும் வீடியோவாக வைராலகிவருகிறது.

ஜார்ஜியா நாட்டில் இரண்டு சிறுவர்கள் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருக்க, அந்த சிறுவர்களின் தாய் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து புத்தம் படித்திக்கொண்டிருந்தார். அப்போது சிறுவன் ஒருவன் அம்மா வேகமாக ஓடுங்கள் என எச்சரிக்க, சற்றும் யோசிக்காமல் அந்த பெண் அங்கிருந்து எழுந்து வேகமாக ஓடுகிறார்.

அவர் நாற்காலியில் இருந்து எழுந்து சிறிது தூரத்தை கடப்பதற்குள் அவருக்கு பின்னால் இருந்த மரம் ஒன்று அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் விழுந்து நொறுங்குகிறது. சிறுவனின் சாமர்த்தியத்தால், அதிர்ஷ்டத்தாலும் அந்த பெண் உயிரிபிழைத்தநிலையில் இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானநிலையில் தற்போது வைராலகிவருகிறது.

வீடியோ லிங்க்: https://www.dailymail.co.uk/news/article-8532931/Run-Mom-Sunbathing-mother-narrowly-escapes-crushed-tree-crashes-lounger.html#v-7042108191237257850


Advertisement