குவைத், துபாய், கத்தார், அபுதாபியில் அடுத்தடுத்து சத்தம்.. பதறும் மக்கள்.. நடப்பது என்ன?



Middle East Tensions Escalate: Explosions Reported in Dubai, Abu Dhabi, Kuwait and Qatar Amid Iran Israel Conflict

Dubai Under Attack: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

போரின் தொடக்கம்:

இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர் தொங்கியதில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. கடந்த அக்டோபர் 2023ல் தொடங்கிய போர் 2026ல் தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீனியத்தின் மீதான தாக்குதலுக்கு மத்திய கிழக்கில் இருக்கும் ஈரான், ஓமன் உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அமெரிக்காவின் துணையுடன் இஸ்ரேல் அனைத்தையும் முன்னெடுத்தது. போரை பலஸ்தீனியம் துருக்கி உள்ளிட்ட பிற நாடுகளின் அமைப்புகள் கொடுத்த ஆயுதத்தால் முன்னெடுத்தாலும், இஸ்ரேலுக்கு தொடக்கத்தில் 1400 மரணங்கள் மிகப்பெரிய ஆத்திரத்தை தந்தது. இதனால் பதிலுக்கு போர் புரிந்து இதுவரை 60,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் தொடர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: India US Trade Deal: இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்.. எதிர்க்கட்சிகளின் அமளி.. மத்திய அமைச்சர் விளக்கம்.!

அமைதி முயற்சியும் ஆபத்தும்:

இந்நிலையில், போரை அமைதிக்கு கொண்டு வர ஐக்கிய அமீரகம் முயற்சிக்கிறது. அமெரிக்கா துருப்புகள் தனது மண்ணில் இராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தவும் இடம் கொடுத்துள்ளது. இது ஈரானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த, இஸ்ரேலும் ஈரான் அணு ஆயுதத்தை வைத்து எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரித்து வந்தது. இந்நிலையில், ஐக்கிய அமீரகம் மீது நேற்று முதல் ஈரான் தனது தாக்குதலை தொடர்ந்துள்ளது. இஸ்ரேலும் ஈரானுக்கும் நுழைந்து தலைமை மதகுரு காமினேனி வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். மேலும், சில அமைச்சர்கள், ராணுவ தளபதிகளும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலால் பதற்றம்:

அயாத்துல்லா அலி காமினேனி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஈரான் ராணுவம் போர் அறிவிப்புடன் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இஸ்ரேல், அமீரகத்தின் பல நகரங்கள் மீதும் தாக்குதல் முன்னெடுக்கப்படுகிறது. அமீரகத்தின் மிகப்பெரிய & முக்கிய நகரங்களான துபாய், ஷார்ஜா, அஜ்மான், ராஷ்-அல்-ஹைமா, குவைத், கத்தார் என பல இடங்களில் தாக்குதல் தொடர்கிறது. இதனால் அங்குள்ள இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டவர் பயத்தில் இருக்கின்றனர். பல இடங்களில் அபாய ஒலி எழுப்பப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் அபாய சங்கிலி ஒலிக்கும் முன்னரே டிரோன்கள் வானில் பறந்து வந்துள்ளன.

Iran Israel Conflict

ஏவுகணை, டிரோன் கொண்டு தாக்குதல்:

ஒருசில இடங்களில் ஈரான் ராணுவத்தின் ஏவுகணை மற்றும் டிரோன்கள் தாக்கினாலும், பெரும்பாலான இடங்களில் அவை வானிலே தடுத்து சிதறடிக்கப்பட்டுள்ளது. அதன் எஞ்சிய பாகங்கள் அங்கங்கே விழுகின்றன. இதனால் வேலை, சுற்றுலா என துபாய் வந்த பலரும், விமானம் இல்லாத காரணத்தால் பயணத்தை மேற்கொள்ள இயலாமலும் தவித்து வருகின்றனர். நிலைமை சீரானதும் விமான போக்குவரத்து தொடங்கும் என்பதால், அமீரகத்தில் உள்ள வெவ்வேறு இடங்களில் வேலை பார்க்கும் இந்தியர்கள், தமிழர்கள் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் எச்சரிக்கை:

ஏதேனும் மர்ம பொருட்கள் கீழே விழுந்தால் அதன் அருகில் செல்ல கூடாது எனவும் அமீரக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அடுத்தகட்ட பயணம் அல்லது ஆபத்தான நிலை குறித்து புகார் அளிக்க இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற முக்கிய நகரங்களிலும் தாக்குதல் தொடர்வதால், கவனமாக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையும் உலகளவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது தெரியாமல் பதறி வருகின்றன. அதே நேரத்தில், அமெரிக்கா ஈரானிய அரசு படையை சரணடைய சொல்லி வற்புறுத்தியுள்ளது. தங்களிடம் ஒரு நாளைக்குள் சரணடைந்தால் பிரச்சனை இல்லை, மீறினால் இழப்புகள் அதிகம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேல் - ஈரான் போரால் சவுதியில் கடும் பாதிப்பு.. தமிழ்நாடு அரசு உதவி எண்கள் அறிவிப்பு.!