இஸ்ரேல் - ஈரான் போரால் சவுதியில் கடும் பாதிப்பு.. தமிழ்நாடு அரசு உதவி எண்கள் அறிவிப்பு.!
Dubai Latest News: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து அறியவும், அவர்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்கவும் தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஈரான் மற்றும் அதனை சுற்றியுள்ள ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், முடிந்தவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், இந்திய தூதரகம் வெளியிடும் அறிவுறுத்தலின்படி செயல்படவும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கட்டுப்பாட்டு அறை அமைப்பு:
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் வளைகுடா நாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்தும், அங்குள்ள தமிழர்களின் நிலைமையை உடனுக்குடன் அறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்காக, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறைக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #Breaking: தொடங்கியது பாராளுமன்ற கூட்டத்தொடர்.. பிரதமர் நரேந்திர மோடி முக்கிய கோரிக்கை.!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் போர் பதட்டம் கேள்விப்பட்டவுடன் உடனடி நடவடிக்கை.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/tVOX7Ejg0S
— TN DIPR (@TNDIPRNEWS) March 1, 2026
தொடர்பு கொள்ளவும்:
தமிழ்நாடு அரசு அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, நிலைமையை கண்காணித்து வருகிறது. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், அவர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி எண்களை அல்லது புது டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையினை தொடர்புகொள்ளலாம்.
புது தில்லி கட்டுப்பாட்டு அறையின் உதவி எண்கள்: 011-24193300 (Land line) 92895 16712 (Mobile & Whatsapp)
அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்கள்: இந்தியாவிற்குள் 1800 309 3793, +91 80 6900 9900 (Missed Call) தொடர்புக்கு +91 80 6900 9901
துபாய் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல்:
🚨 Just IN 🚨
— Megh Updates 🚨™ (@MeghUpdates) March 1, 2026
A major EXPLOSION has been reported at Dubai International Airport after an Iranian strike. pic.twitter.com/HE63UJ2cPS