உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்த சீனா! திடீரென கீழிறக்கப்பட்ட அமெரிக்க கொடி!

Summary:

merican Flag Lowered in china

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இந்த வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

மேலும் இது தொடர்பாக சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் திடீரென உத்தரவு பிறப்பித்தது.

சீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான சீனாவின் பதிலடியால் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அமெரிக்கக் கொடி திங்கள்கிழமை காலை கீழிறக்கப்பட்டது. அமெரிக்கா, சீனா இடையேயான இந்த மோதல் சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.


Advertisement