விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
அப்படிப்போடு.... குட் நியூஸ் சொன்ன ஆல்யா மானசா! அவரே போட்ட பதிவிற்கு குவியும் வாழ்த்துக்கள்...
சின்னத்திரை நடிப்பில் பிரபலமான ஆல்யா மானசா, தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புதிய தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். தனது புதிய சீரியல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆல்யா, ரசிகர்களிடையே மீண்டும் பேசப்படத் தொடங்கியுள்ளார்.
ராஜா ராணி மூலம் புகழ்பெற்றவர்
ஆல்யா மானசா, “ராஜா ராணி” சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடயே பிரபலத்தை பெற்றவர். அந்த சீரியலில் அவருடன் இணைந்து நடித்த கார்த்திக் சஞ்சீவ் மீது காதல் வளர்த்த ஆல்யா, 2019ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின் குழந்தைகளை பெற்றதால் சில ஆண்டுகள் சீரியல் நடிப்பில் இருந்து விலகியிருந்தாலும், 2022ஆம் ஆண்டு, 'இனியா' சீரியலில் நாயகியாக திரும்பியுள்ளார். அதே நேரத்தில் கார்த்திக் சஞ்சீவ் 'கயல்' சீரியலில் நாயகராக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: இவர் தான் நடிகர் அப்பாஸா? இளசுகளை கட்டிப்போட்ட அப்பாஸ் ஆளே மாறிப்போய் இப்போ எப்படி இருக்காரு பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள்...
அதிக சம்பளம் பெறும் நடிகை
சின்னத்திரைத் துறையில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஆல்யா மானசா ஒருவர் என கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு ரூ.50,000 சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த வீடு மற்றும் YouTube சேனல்
சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, அண்மையில் சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வீட்டில் குடியேறியுள்ளனர். அவர்களது YouTube சேனல் மூலம் குடும்பத்துடன் இணைந்த காட்சிகளை பகிர்ந்து வருகின்றனர். குழந்தைகள் மற்றும் குடும்ப வாழ்க்கையை மையமாகக் கொண்டு காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
புதிய சீரியல் வாய்ப்பு
இப்போது, ஆல்யா மானசா புதிய சீரியலுக்கு கமிட் ஆகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சீரியலின் படப்பிடிப்பு குழுவுடன் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த செய்திக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வாழ்க்கையை உணர விரும்பினால் நீங்கள் இதை செய்யுங்க! எதை இழந்து வருகிறோம் என்பது புரியும்! பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா புகழாரம்...
