அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட புகழ்பெற்ற நடிகை! மரணத்தில் நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள்....
பிரபல நடிகை ஹூமைரா அஸ்கர் பாகிஸ்தானில் மிகுந்த ரசிகர்களை கொண்டவர். 32 வயதான இவர் பல படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர். தற்போதைய தகவல்களின்படி, கராச்சியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இவர் மரணமடைந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அடுக்குமாடி வீட்டில் திடீர் மரணம்
ஹூமைரா அஸ்கர் கராச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். சமீபமாக அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அண்டை வீட்டுக்காரர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அழுகிய நிலையில் அவரது சடலம் கிடைத்தது.
தற்போது போலீசார் அவரது சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுகள் மூலம் அவருடைய மரணத்திற்கான உண்மை காரணம் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
இதையும் படிங்க: விஞ்ஞானிகளின் புதிய கண்டுப்பிடிப்பு! பூமியிலிருந்து வெளியேறும் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம்!