20 பசுக்களை சுட்டுக்கொன்ற விவசாயி! வெளியான அதிர்ச்சி காரணம்!
20 பசுக்களை சுட்டுக்கொன்ற விவசாயி! வெளியான அதிர்ச்சி காரணம்!

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான 20 பசுமாடுகளை சுட்டு கொன்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான இடங்களில் காட்டு தீ பரவி பல விலங்குகள் உட்பட மனிதர்களும் உயிர் இழந்தது உலகறிந்த விஷயம்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள Steve என்ற விவசாயியின் பண்ணையை காட்டு தீ கடுமையாக தாக்கியுள்ளது. இதில் அந்த விவசாயியின் மாடுகள் காட்டு தீயில் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் உயிர்க்கு போராடிய நிலையில் இருந்துள்ளது.
தான் ஆசையாக வளர்த்த மாடுகள் தினம் தினம் தீ காயத்தால் படும் கஷ்டத்தை பார்த்து மனம் நொந்துபோன Steve அவற்றை சுட்டு கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி அதிக காயம் அடைந்த 20 மாடுகளை தேர்வு செய்து அவற்றை சுட்டு கருணை கொலை செய்துவிட்டு மாடுகளை பார்த்து அழுதுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.