சன் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு சீரியல்களின் நேரம் மாற்றம்! எந்தெந்த சீரியல் தெரியுமா?
ஓடிடியில் ரிலீஸாகும் சூர்யாவின் ரெட்ரோ.! எப்போ தெரியுமா?? வெளிவந்த தகவல்!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ. சூர்யாவின் 44வது படமான இதனை 2டி என்டர்டைன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ
மேலும் அவர்களுடன் ஜெயராம், கருணாகரன், பிரகாஷ்ராஜ் ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்தனர். ரெட்ரோ திரைப்படத்திற்கு
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மற்றும் காதல் கலந்த படமாக உருவான இது தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு மே 1 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதையும் படிங்க: இந்தியாவின் ஏவுகணை நாயகன்.. ஏபிஜே அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் பிரபல முன்னணி நடிகர்.! வெளிவந்த அறிவிப்பு!!
ஓடிடி ரிலீஸ்
மேலும் படம் இதுவரை ரூ.235 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரெட்ரோ திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் தூக்கி வீசப்பட்ட ப்ளூ சூட்கேஸில் சடலமாக கிடந்த இளம்பெண்! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்....