த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை! யார் தெரியுமா?



trisha-career-update-tamil-cinema

தமிழ் சினிமாவிற்கு 2002ல் ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. தொடர்ந்து 22 ஆண்டுகளாக முன்னணி இடத்தில் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். இன்றும் இளமையோடு பரபரப்பான நடிப்பில் வலம் வருகிறார்.

Trisha Tamil Cinema

முன்னணி ஹீரோக்களுடன் இணைந்த திரிஷா

அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படம் விமர்சன ரீதியாக கலவையான பார்வைகளை பெற்றது. அதன் பிறகு திரிஷா, அஜித் இணைந்து நடித்த ‘குட் பேட் அக்லி’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

தொடர்ந்து ஹீரோயினாக வலம் வருகிறார்

42 வயதிலும் திரிஷா ஒரு பிஸியான ஹீரோயின். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவர். தற்போதைய நிலவரப்படி, அவர் நடிப்பில் வெளியாக உள்ள புதிய படம் தக் லைஃப்.

இதையும் படிங்க: சொல்ல வார்த்தைகள் இல்லை.! கணவர் சுந்தர். சியின் 30 ஆண்டு சினிமா பயணம் குறித்து ஓப்பனாக சொன்ன குஷ்பூ!

Trisha Tamil Cinema

தக் லைஃப் படத்தில் திரிஷா மற்றும் அபிராமி

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5 அன்று வெளியாகிறது. இந்தப் படத்தில் ஒரு சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Trisha Tamil Cinema

திரிஷாவை விட இளம் அபிராமி

பெரும்பாலோருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால், அபிராமி தான் திரிஷாவை விட வயதில் இளையவர். திரிஷா மே 1983ல் பிறந்தவர். அபிராமி ஜூலை 1983ல் பிறந்தவர்.

Trisha Tamil Cinema

கதாபாத்திர தேர்வில் வித்யாசம்

இருவரும் ஒரே வயதினராவதையையும் கடந்த 22 வருடங்களாக திரிஷா நாயகியாகவே நடிப்பதையும் பாராட்ட வேண்டியது தான். அதே சமயம், அபிராமி அம்மா போன்ற மூத்த கதாபாத்திரங்களில் நடிப்பது ரசிகர்களுக்குச் சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது.

 

 

இதையும் படிங்க: என்னது... வனிதா விஜயகுமார் கர்ப்பமா? இணையத்தில் வைரலாகும் புதிய காணொளி!