சிங்கப்பெண்ணே சீரியல் நடிகர் அன்புவின் உண்மையான மனைவியை பார்த்துள்ளீர்களா! அட இவ்வுகளும் நடிகையாம்! அழகிய புகைப்படங்கள்...



singappenne-serial-anpu- wife-photo

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறந்த டிஆர்பி தரம் பெற்ற தொடர்களில் சிங்கப்பெண்ணே தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. பிரபல சீரியல் ஆன இதன் கதைக்களம் தற்போது பரபரப்பாக நகர்கிறது. குறிப்பாக, ஆனந்தி கர்ப்பம் என்று தெரிந்த நிகழ்வுகள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கப்பெண்ணே serial

ஆனந்தியின் கர்ப்பம் யாருக்கெல்லாம் தெரிய வந்தது

தொடக்கத்தில், ஆனந்திக்கு நடந்த மாற்றங்கள் முதலில் மித்ரா கவனிக்கிறார். அதன் பிறகு, அவரின் நெருங்கிய தோழிகள் மற்றும் சுற்றியுள்ளவர்களுக்கும் இந்த தகவல் பரவுகிறது. இது தொடர் ரசிகர்களிடம் பல கேள்விகளை எழுப்புகிறது.

அன்புக்கும் மகேஷுக்கும் எப்போது தெரிய வரும்

இந்த தகவல் அடுத்ததாக அன்பும் மகேஷும் அறிந்துகொள்வார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இன்றைய எபிசோட்டில் ஆனந்தி, “எனது திருமணம் குறித்து இப்போது பேச வேண்டாம்” என கூறும் காட்சி, திருப்புமுனையை உருவாக்குகிறது.

இதையும் படிங்க: இந்தியாவின் ஏவுகணை நாயகன்.. ஏபிஜே அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் பிரபல முன்னணி நடிகர்.! வெளிவந்த அறிவிப்பு!!

சிங்கப்பெண்ணே நடிகரின் நிஜ  வாழ்க்கை பயணம்

இந்த தொடரில் அன்பரசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் அமல்ஜித். அவர், பிரபல சீரியல் நடிகை பவித்ராவை காதலித்து திருமணம் செய்துள்ளார். பவித்ரா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கண்ணே கலைமானே தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர்.

சிங்கப்பெண்ணே serial

அழகிய ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்

இந்த காதல் ஜோடியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள், இவர்களின் உறவை வரவேற்று  வாழ்த்துகின்றனர்.சிங்கப்பெண்ணே serialசிங்கப்பெண்ணே serialசிங்கப்பெண்ணே serialஇதையும் படிங்க: ஓடும் ரயிலில் தூக்கி வீசப்பட்ட ப்ளூ சூட்கேஸில் சடலமாக கிடந்த இளம்பெண்! பெங்களூருவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்....