கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??



padaithalaivan-movie-release-postponed

அறிமுக இயக்குநர் அன்பு எழுதி இயக்கியுள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படத்தில், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா  இசையமைத்துள்ளார். மேலும் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை, வசனங்களை எழுதியுள்ளார்.

படைத்தலைவன் ரிலீஸ் தள்ளிவைப்பு 

படைத்தலைவன் திரைப்படம் மே 23ஆம் தேதி (நாளை) திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக படம் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சண்முக பாண்டியன் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Padaithalaivan

இதையும் படிங்க: மனசெல்லாம் மழையே.. கொள்ளை அழகில் ரசிகர்களை சொக்க வைத்த நடிகை பிரணிதா.! Cannes விழாவில் செம மாஸ்.!

இடையூறுக்கு மன்னிக்கவும்

அதில் அவர்,  அனைவருக்கும் வணக்கம், படைத்தலைவன் திரைப்படம் மே 23 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு ஒதுக்கீட்டு சிக்கல்களின் காரணமாக, பட வெளியீடு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியை விரைவில் உறுதி செய்து, அறிவிக்க உள்ளோம். இந்த இடையூறுக்கு மன்னிக்கவும். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி” என பதிவிட்டுள்ளார்.

 

இதையும் படிங்க: சீதாவின் காதலனை நேரில் பார்த்த முத்து! முத்துவின் அடுத்த முடிவு !எதிர்பாராத திருப்பத்துடன் சிறக்கடிக்க ஆசை....