அதிருப்தியில் அதிமுகவை நோக்கி நகரும் தவெக நிர்வாகிகள்.... பச்சைக்கொடி காட்டிய எடப்பாடி! அதிர்ச்சியில் அல்லேலப்படும் விஜய்!!!



tvk-candidate-selection-issue-district-secretaries-revo

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் எழுந்துள்ள உள்கட்சி அதிருப்தி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முன்பே அமைதியான ஒற்றுமையை காட்ட வேண்டிய சூழலில், வேட்பாளர் தேர்வு விவகாரம் தற்போது கட்சிக்குள் பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

வேட்பாளர் தேர்வு சர்ச்சை

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான 90 சதவீத வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கிய திருப்பமாக அமைந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசிய விதம் மற்றும் சீட் ஒதுக்கீட்டில் அவர் கையாண்ட அணுகுமுறை பலரிடையே அதிருப்தியை உருவாக்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டத்தில் பங்கேற்ற 30-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த வேட்பாளர் தேர்வு முறையே கட்சிக்குள் பிளவை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.

இதையும் படிங்க: BREAKING: இன்னும் சற்று நேரத்தில்.... தவெக கட்சியில் இணையும் முக்கிய புள்ளி! நொடிக்கு நொடி பரபரப்பு! அனல் பறக்கும் விஜய் அரசியல்!

அதிருப்தி – அதிமுக நோக்கி நகரும் நிர்வாகிகள்?

இந்த அதிருப்தியின் உச்சமாக, கொங்கு மற்றும் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் அதிமுகவில் இணையத் தூது விட்டுள்ளதாக வெளியான தகவல், கட்சி தலைமையகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ளும் நிலையில், மாவட்ட நிர்வாகிகள் போன்ற வலுவான அடித்தளத்தினர் மாற்றுக் கட்சியை நோக்கி நகரும் சிக்னல் கட்சி உயர் தலைமையிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிக்னலைத் தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது அரசியல் சூழலில் புதிய கணக்குகளை உருவாக்கியுள்ளது.

தேர்தலை எதிர்கொள்ளும் முன்பே ஏற்பட்டுள்ள இந்த உள்கட்சி பரபரப்பு, தமிழக அரசியலில் எதிர்பாராத மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். வரும் நாட்களில் இந்த விவகாரம் எந்த திசையில் நகரும் என்பது தான் அரசியல் வட்டாரங்களில் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: செங்கோட்டையனின் அடுத்த அதிரடி சம்பவம்! தவெக விஜய்யுடன் இணையும் அதிமுக அமைச்சர்? அடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி!