BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
புதிய அறிவிப்பு! தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி வெளியானது!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்களும் பெற்றோர்களும் மத்தியில் அதிகரித்திருந்தது. வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்ற சந்தேகம் நிலவிய நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் கோடை மழை காரணமாக தற்போது வெப்பம் குறைந்துள்ளதால், பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலை பள்ளிகள் திறக்கத் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதோடு, பள்ளிகள் திறக்கப்படும் தினத்திலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கும் பணியும் விரைவாக முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்ததப்படி, 2025–26 கல்வியாண்டுக்குத் தேவையான மொத்தம் 4.19 கோடி புத்தகங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4.16 கோடி புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு வழங்கத் தயாராக உள்ளன. மீதமுள்ள புத்தகங்களும் ஒரிரு நாட்களில் அச்சடித்து அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோடை விடுமுறை நீட்டிப்பு?.. அமைச்சரின் பதிலால் குஷியில் மாணவர்கள்.!!
இந்த நடவடிக்கைகள் அனைத்தும், மாணவர்கள் கல்வியை தாமதமின்றி தொடங்குவதற்கான அரசின் திட்டமிடலையும், செயல்திறனையும் வெளிப்படுத்துகின்றன.
முடிவில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 2025 ஜூன் 2 ஆம் தேதி, எந்தவித மாற்றமும் இல்லாமல் திறக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விபத்தில் உயிரிழந்த கண்டக்டர்.! விசாரணையில் அம்பலமான மனைவியின் மாஸ்டர் பிளான்.! திடுக் சம்பவம்!!