விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
கோடை விடுமுறை நீட்டிப்பு?.. அமைச்சரின் பதிலால் குஷியில் மாணவர்கள்.!!

தமிழ்நாடு மாநில பள்ளி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் தேர்வுக்கு பின்னர் கோடை விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் முந்தைய ஆண்டுகளை விட மிகக் கடுமையாக இருப்பதால் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட வேண்டுமென பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறை நீட்டிப்பு?
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. கோடை விடுமுறை நீட்டிப்பு தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "பொது இடங்களிலும் பாதுகாப்பில்லையா..." இரயில் நிலையத்தில் பாலியல் சேட்டை.!! 30 வயது நபர் கைது.!!
வெயிலின் தாக்கம் அதிகம்
மேலும் கடலோர மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கோடை விடுமுறை மேலும் சில நாட்கள் தள்ளிச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விடுமுறையில் வழிபறி... "பாட்டியிடம் கைவரிசை காட்டிய ராணுவ வீரர்..." மடக்கி பிடித்த மக்கள்.!!