தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
விடுமுறையில் வழிபறி... "பாட்டியிடம் கைவரிசை காட்டிய ராணுவ வீரர்..." மடக்கி பிடித்த மக்கள்.!!

விருதுநகர் மாவட்டத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட ராணுவ வீரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராணுவ வீரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையிலடைத்தனர்.
மூதாட்டியிடம் செயின் பறிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமாட்சி. 61 வயதான இவர் நேற்றிரவு அருகிலுள்ள மளிகை கடையில் சமையல் எண்ணெய் வாங்குவதற்காக சென்றிருக்கிறார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் மூதாட்டி அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றார்.
துரத்தி பிடித்த பொதுமக்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி அலறியிருக்கிறார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் திருடனை துரத்திச் சென்று பிடித்தனர். மேலும் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுதூர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர்.
இதையும் படிங்க: "அதிமுக - பாஜக கூட்டணி ஒரு போதும் வெற்றிபெறாது..." தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி.!!
ராணுவ வீரர் கைது
அப்போது பொதுமக்கள், பிடித்து வைத்திருந்த திருடனை காவல்துறை வசம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் மூதாட்டியிடம் செயினை பறித்துச் சென்ற நபர் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தை வேல்(30) என தெரிய வந்திருக்கிறது. மேலும் ராணுவத்தில் பணியாற்றி வரும் இவர் தற்போது விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையிலடைத்தனர். விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 2 முறை கரு கலைப்பு.!! "இப்போவே கல்யாணம் பண்ணு..." மிரட்டிய காதலி.!! எரித்து கொன்ற காதலன்.!!