"அதிமுக - பாஜக கூட்டணி ஒரு போதும் வெற்றிபெறாது..." தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி.!!

தமிழகத்தில் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறிய அதிமுக தற்போது மீண்டும் பாஜக பக்கம் சாய்ந்திருக்கிறது. இந்நிலையில் மிரட்டலால் ஏற்படும் கூட்டணி ஒரு காலத்திலும் வெற்றி பெறாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்திருக்கிறார்.
கட்சியில் இணையும் விழா
தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணையும் விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் நிகழ்ச்சி முடிந்த பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அரசியல் பாரபட்சங்களைக் கடந்து மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அடக்குமுறைகளை எதிர்த்து போராட வேண்டும்
தமிழக சட்டசபையில் மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு மற்றும் பொதுமக்களை பாதிக்கும் ஒன்றிய அரசின் சட்டங்களுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி போராடி வருகிறோம். ஒன்றிய அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாநில முதல்வர்களின் ஒப்புதல் இல்லாமலேயே மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. நீட் தேர்வு, வக்பு மசோதா மற்றும் பொது சிவில் சட்டம் போன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக சட்டசபைக்கு வெளியிலும் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2 முறை கரு கலைப்பு.!! "இப்போவே கல்யாணம் பண்ணு..." மிரட்டிய காதலி.!! எரித்து கொன்ற காதலன்.!!
மிரட்டி பணிய வைக்கும் கூட்டணி வெற்றி பெறாது
மேலும் தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி அன்பாலும் கொள்கையாலும் இணைந்த வெற்றி கூட்டணி. ஆனால் அதிமுகவை, பாரதிய ஜனதா கட்சி அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அரசு இயந்திரங்களை பயன்படுத்தி மிரட்டி பணிய வைத்திருக்கிறது. அந்தக் கூட்டணி ஒருபோதும் வெற்றி பெறாது. கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட அரசியல் கூட்டணியே வெற்றி பெறும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: திருச்சி அருகே பயங்கரம்... "உறங்கி கொண்டிருந்த விவசாயி எரித்து கொலை..." மர்ம நபருக்கு வலை வீச்சு.!!