மருத்துவ மாணவியை விடுதிக்கு அழைத்து வன்கொடுமை செய்த மருத்துவர்.. தேர்வில் உதவுவதாக கூறி கொடூரம்.!



Doctor Arrested for Assaulting Medical Student Under Pretext of Exam Help

தேர்வில் வெற்றி பெற உதவி செய்வதாக கூறி மருத்துவ மாணவியை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, பிங்கர் போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவமனை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 22 வயது மாணவியும் படித்து வருகிறார்.

மாணவி பாலியல் வன்கொடுமை:

இந்த நிலையில் மருத்துவ மாணவி தேர்வில் வெற்றி பெற உதவி செய்வதாக கூறி கல்லூரியில் பணியாற்றி வரும் ஓம் பிரகாஷ் என்ற 44 வயது மருத்துவர் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். மாணவியை தனியார் விடுதிக்கு அழைத்து சென்றவர், மது போதையில் தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவியை திட்டமிட்டு சீரழித்த காம பேராசியர்கள்.. வீடியோ எடுத்து நடந்த கொடுமை.!

Ooty medical student

அறையில் கேட்ட சத்தம்:

இதனால் அதிர்ந்த மாணவி மருத்துவரிடம் சண்டையிட்ட நிலையில், சத்தம் கேட்டு வந்த ஹோட்டல் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் விசாரணை செய்த போது மாணவிக்கு மருத்துவர் போதைப்பொருள் கொடுத்து பின் வன்கொடுமை செய்தது உறுதியானது. 

போலீஸ் விசாரணை:

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி உதகை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் அரசு மருத்துவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த ஓம் பிரகாஷ்க்கு ஏற்கனவே இரண்டு திருமணமான நிலையில், மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர் தற்போது மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கி இருக்கிறார்.