எடப்பாடியை எதிர்த்து நிற்கும் 2 புள்ளிகள்! விஜய்யின் தவெக அரசுக்கு ஆதரவு.... அதிமுகவை அதிரவைக்கும் அரசியல் நகர்வு!!!



aiadmk-budget-session-eps-mla-meeting

தமிழக அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஆகஸ்ட் 5) தொடங்கியது. கூட்டத்தொடருக்கு முன்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தவெக ஆட்சிக்குப் பிறகு அரசியல் மாற்றங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. கடந்த மே 10-ஆம் தேதி விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து மே 13-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் தவெக-வுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! விஜய் டேபிளுக்குப் போன அந்த ஷாக் ரிப்போர்ட்... எதிர்பார்க்காத பெரிய ட்விஸ்ட்!!!

அதன்பின் மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கரும் தங்களது பதவியை துறந்து தவெகவில் இணைந்தனர்.

தகுதி நீக்க கோரிக்கை; பின்னர் மனுக்கள் வாபஸ்

அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்களை கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு அளித்தது. அதேநேரத்தில், கொறடா உத்தரவை மீறியதாக எடப்பாடி தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பும் தனியாக மனு தாக்கல் செய்தது. தகவலின்படி, இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன.

பட்ஜெட் கூட்டத்தொடரில் கவனம் ஈர்த்த நிகழ்வு

இதற்கிடையில், கட்சிக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது. அதே சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்திலும் இருவரும் பங்கேற்கவில்லை. இருப்பினும், அதன்பின் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருவரும் வழக்கம்போல் கலந்து கொண்டது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

இதையும் படிங்க: அவசரப்பட்டுடோமே..... CM விஜய்யின் முடிவால் சிக்கலில் சிக்கி தவிக்கும் முன்னால் எம். எல்.ஏ.க்கள்..! அடுத்தடுத்த ட்விஸ்ட்...!!!