அவசரப்பட்டுடோமே..... CM விஜய்யின் முடிவால் சிக்கலில் சிக்கி தவிக்கும் முன்னால் எம். எல்.ஏ.க்கள்..! அடுத்தடுத்த ட்விஸ்ட்...!!!
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அரசியல் பயணத்தைத் தொடங்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் எதிர்காலம் குறித்து புதிய தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. இடைத்தேர்தல் தாமதம், சட்டப் பிரச்சினைகள் மற்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் ஆகியவை இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இடைத்தேர்தலுக்கு நீதிமன்றத் தடை
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 7 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் வெற்றி பெற்று பின்னர் காலி செய்த திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து மொத்தம் 8 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 31 வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் தற்காலிக தேக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BREAKING: 29 பேர்க்கு அதிரடி பணி நியமனம்! புதிய பொறுப்புகளில் மூத்த தலைவர்கள்..... முதல்வர் விஜய் தூக்கிக்கொடுத்த முக்கிய பொறுப்பு!!!
சட்டச் சிக்கல்களும் சர்வே முடிவுகளும்
இதற்கிடையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பதவியை ரத்து செய்யக் கோரி அதிமுக தரப்பு சபாநாயகரிடமும் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளது. இந்தச் சூழலில், 'வாய்ஸ் ஆஃப் காமன்' நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், திருச்சி கிழக்கு தவிர மற்ற 7 தொகுதிகளிலும் தவெகவுக்கு சாதகமற்ற நிலை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த சர்வே அறிக்கையின் அடிப்படையில் இரு விஜயபாஸ்கர்களைத் தவிர மற்ற 5 முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என கட்சித் தலைமை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிருப்தியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்?
போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படும் அந்த 5 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தங்களுக்கு முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் பதவிகளையாவது வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் அதுவரை பொறுமையாக இருக்குமாறும் அமைச்சர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், முன்னாள் அதிமுக நிர்வாகிகளுடன் நடக்கும் தனிப்பட்ட உரையாடல்களில், தவெகவில் தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்து வருவதாகவும், கட்சியில் எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற மனநிலையை வெளிப்படுத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்! 15 வருட பணி... கருணாஸுக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய புள்ளி..! தவெக வின் கோட்டையாக மாறிய புதுக்கோட்டை...!!!