கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு எப்படி உள்ளார்? மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுவாசக் கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் வி.எஸ். பாபு அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், வி.எஸ். பாபுவின் உடல்நிலை தற்போது சீராகவும், திருப்திகரமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் பதிலளித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொளத்தூர் எம்.எல்ஏ உடல்நிலை நிலவரம்? மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

வி.எஸ். பாபுவின் ஒட்டுமொத்த உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அதற்கேற்ப தேவையான சிகிச்சை மற்றும் மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.
இதையும் படிங்க: திடீர் மூச்சுத்திணறல்… ICU-வில் கொளத்தூர் எம்எல்ஏ! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!