வரி வரியாய் CM விஜயை புகழ்ந்து தள்ளிய அமைச்சர் வினோத்! அடுத்த நொடி கண்டித்த சபாநாயகர்... வேளாண் பட்ஜெட்டை மட்டும் வாசிங்க! வைரலாகும் வீடியோ...!!!



tamil-nadu-agriculture-budget-minister-vinoth-praises-c

தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் வினோத் பட்ஜெட் உரையை தொடங்கிய சில நிமிடங்களிலேயே முதல்வர் விஜய் குறித்து நீண்ட நேரம் பாராட்டு தெரிவித்ததால் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு பதிவு செய்தன.

பட்ஜெட்டுக்கு முன் நீண்ட பாராட்டு

தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு நேற்று மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது, பட்ஜெட் அறிவிப்புகளை வாசிப்பதற்கு முன்பாகவே முதல்வர் விஜய்யை பாராட்டி அவர் நீண்ட நேரம் உரையாற்றினார்.

இதையும் படிங்க: மீண்டும்... மீண்டும்.... "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர் "..! திருச்சி ஏர்போர்ட்டில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு ...!!!

கவிதை மூலம் முதல்வருக்கு புகழாரம்

உரையின்போது, 'கோட் சூட் அணிந்த விவசாயி விஜய்', 'ஜனநாயகனாகிய நீங்கள் பணநாயகனை அழித்தவர்' என்ற வரிகளுடன் கவிதை வடிவில் அமைச்சர் வினோத் முதல்வரை புகழ்ந்தார். இதனால் அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்து, பட்ஜெட் உரையை வாசிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சபாநாயகர் தலையீடு

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனையைத் தொடர்ந்து சபாநாயகர் தலையிட்டு அமைச்சர் வினோத்துக்கு அறிவுரை வழங்கினார். முதல்வரை புகழ்ந்து பேசுவதை நிறுத்திவிட்டு, அவையின் முக்கிய பணியான வேளாண் பட்ஜெட் உரையை தொடர்ந்து வாசிக்குமாறு அவர் அறிவுறுத்தியதை அடுத்து பட்ஜெட் தாக்கல் நடைமுறை மீண்டும் தொடர்ந்தது.

 

இதையும் படிங்க: யாருகிட்ட உங்க ஆட்டம்லாம்.... சட்டமன்றத்தில் வெடிக்க போகும் பூகம்பம்! திமுக-வை வேட்டையாடிய தவெக... விஜய் கையில் இருக்கும் அந்த ரகசிய ஃபைல்லால் ஆடிப்போன உதயநிதி!!!