விராட் கோலி களமிறங்கியது ஆரவாரத்தால் அதிர்ந்த அரங்கம்! கிங்குக்கு மைதானத்தில் கிடைத்த வேற லெவல் வரவேற்பு..! வைரல் வீடியோ..!!!



virat-kohli-grand-welcome-auckland-odi

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டியில், விராட் கோலிக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு கவனம் பெற்றுள்ளது. ஆக்லாந்து ஈடன் பார்க் மைதானத்தில் கோலி களமிறங்கியபோது அரங்கம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரம் எதிரொலித்தது. ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், கோலியின் வருகை ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஒரு ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா

நியூசிலாந்து அணி நிர்ணயித்த 186 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ரோஹித் சர்மா, கைல் ஜேமிசன் வீசிய பந்தில் மிட்-ஆஃப் திசையில் அடித்தார். அங்கு நின்ற மிட்செல் சான்ட்னர் சிறப்பாகக் கேட்ச் பிடித்ததால், ரன் ஏதும் எடுக்காமல் ரோஹித் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி ஒரு ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

இதையும் படிங்க: என்னா ஒரு ஸ்பீடு...! நியூசி. வீரரின் ஹெல்மட்டையே பதம் பார்த்த பந்து... அர்ஷ்தீப் சிங்கின் அல்ட்ராசிட்டி ஸ்பீட்... விக்கெட் அருகே உடைந்து விழுந்த ஹெல்மெட்..! திகில் வீடியோ...!!!

கோலி களமிறங்கியதும் அரங்கில் ஆரவாரம்

ரோஹித் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து விராட் கோலி களத்துக்கு வந்தார். அவர் மட்டையுடன் மைதானத்திற்குள் நுழைந்ததும் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி நியூசிலாந்து ரசிகர்களும் உற்சாகமாகக் குரல் எழுப்பினர். ரசிகர்களின் கைதட்டலும் ஆரவாரமும் மைதானம் முழுவதும் எதிரொலித்தது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

கோலியின் வருகையின்போது ரசிகர்கள் அளித்த வரவேற்பு தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. வெளிநாட்டு மண்ணிலும் அவருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து ரசிகர்கள் பாராட்டுகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னணி வீரராக மட்டுமின்றி, உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் நட்சத்திரமாகவும் கோலி திகழ்வதை இந்த வரவேற்பு மீண்டும் காட்டியுள்ளது.

 

இதையும் படிங்க: விராட் கோலியின் அந்த ஒற்றைக் கை மாயாஜால கேட்ச்…! நேரலை கமெண்ட்ரியில் வியந்து பாராட்டிய ரவி சாஸ்திரி..! வைரல் வீடியோ...!!!