சோதனைகளை தாண்டி லண்டனில் மகன் பெற்ற சாதனை! பெற்ற அப்பாவே தடையா? கணவருக்கு ஆப்பு வைத்த ஆர்த்தி...!!!
ஐயோ.. கடவுளே! வகுப்பறையில் ஆசிரியரிடம் போன 3 ஆம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!
கிழக்கு டெல்லியின் மயூரி விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். நவம்பர் 4-ஆம் தேதி காலை வகுப்பு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மாணவியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
ஆசிரியரை நோக்கிச் சென்றபோது திடீரென மயக்கம்
வழக்கம்போல் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவி, வகுப்பு தொடங்கிய சில நிமிடங்களில் தனது இருக்கையிலிருந்து எழுந்து ஆசிரியரை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைப் பார்த்த ஆசிரியர் உடனடியாக மாணவிக்கு உதவ முயன்றார். சக மாணவர்களும் பள்ளி நிர்வாகத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கொலைக்காரன்.. மசூதிக்குள் தொழுகை முறைகளை சொல்லிக் கொடுத்த இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்! சிக்கிய சிசிடிவி காட்சி...!!!
மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனில்லை
இதையடுத்து, மாணவியை அருகிலுள்ள நிர்மாண் விஹார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். வகுப்பறையில் நடந்த இந்த நிகழ்வு அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே மாணவி உயிரிழந்தது பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடக்கொடுமையே! ஏர்போர்ட்டில் தரையிறங்கிய விமானம்! நொடிப்பொழுதில் இறக்கை சுழன்றதால் தலை நசுங்கி பலியான பாதுகாப்பு படை வீரர்...! ஷாக் வீடியோ.!!!