அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
யாருகிட்ட உங்க ஆட்டம்லாம்.... சட்டமன்றத்தில் வெடிக்க போகும் பூகம்பம்! திமுக-வை வேட்டையாடிய தவெக... விஜய் கையில் இருக்கும் அந்த ரகசிய ஃபைல்லால் ஆடிப்போன உதயநிதி!!!
தமிழக சட்டமன்றத்தில் டாஸ்மாக் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் முறைகேடுகள் நடந்ததாக முதலமைச்சர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சட்டமன்றத்தில் கூறிய குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் விரைவில் வெளியிட ஆளுங்கட்சி தீவிரமாக ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்ற குற்றச்சாட்டுக்கு திமுக எதிர்ப்பு
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசுகையில், டாஸ்மாக் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில் மக்களின் வரிப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டினார். இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், போதிய ஆதாரங்கள் இல்லாமல் பொதுவான குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என்று வலியுறுத்தி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஆதாரங்களை திரட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு
இதையடுத்து, சட்டமன்றத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை வெறும் அரசியல் விமர்சனமாக விடாமல், அதிகாரப்பூர்வ ஆவணங்களுடன் சமர்ப்பிக்க முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தலைமைச் செயலக மூத்த அதிகாரிகள், நிதித்துறை மற்றும் மதுவிலக்குத் துறை அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை உடனடியாகத் திரட்ட உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் அரசு கருவூலத்திற்கு வர வேண்டிய வருவாய், ஒப்பந்த நடைமுறைகள், வசூலிக்கப்பட்ட தொகைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கோப்புகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆவணங்கள்?
வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க உள்ள தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. அந்த அமர்வில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் திரட்டப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க ஆளுங்கட்சி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றத்தில், “நாங்கள் ஆட்சிக்கு வந்தது மக்கள் சேவை செய்யத்தான்; கமிஷன் அடிக்க அல்ல” என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்தார். தற்போது அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை வெளியிடுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய்யின் 5 தவெக அமைச்சர்களை குறிவைக்கும் திமுக... 'ஆபரேஷன் ஈகிள் ஐ' ஸ்டார்ட்...! அறிவாலயத்தால் அதிரும் கோட்டை!!!