உலகம்

மருத்துவமனையில் வயிற்றை இழந்த இளைஞனின் கடைசி ஆசை ,சுட சுட அளித்த மனைவி, திகைத்து போன மருத்துவர்கள்.!

Summary:

மருத்துவமனையில் வயிற்றை இழந்த இளைஞனின் கடைசி ஆசை ,சுட சுட அளித்த மனைவி, திகைத்து போன மருத்துவர்கள்.!

வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் தனது வயிற்றை முழுவதுமாக  இழக்கவிருந்த  நிலையில் கடைசியாக பிரியாணி சாப்பிட வேண்டும் என மனைவியிடம் கேட்டது பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 துபாயை சேர்ந்த குலாம் அப்பாஸ் என்ற இளைஞன் நீண்ட நாட்களாக கடுமையான வயிற்று வலியால் துடித்து வந்துள்ளான்.இந்நிலையில் வயிற்று வலி அதிகமானால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு வயிற்று புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .

இந்நிலையில் மருத்துவமனையில் நீண்ட நாட்களாக தீவிர சிகிச்சை எடுத்து வந்த குலாம் நிலைமை மிகவும் மோசமானது. இந்நிலையில் மருத்துவர்கள் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து முழுமையாக அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

biryani க்கான பட முடிவு

இந்நிலையில் தனது வயிற்றை அகற்றுவதற்கு முன் தனக்கு பிடித்த சிக்கன் பிரியாணியை தான் கடைசியாக சாப்பிட வேண்டுமென குலாம் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். 

 இதைத் தொடர்ந்து குலாம் அப்பாஸின் மனைவி பிரியாணி சமைத்துக் கொண்டு வந்து அவருக்கு கொடுத்துள்ளார். அவரும் தனது ஆசை தீர, வயிறு முட்ட ருசித்து சாப்பிட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் அவரது வயிறு அகற்றப்பட்ட பின் திரவ உணவை தவிர வேறு எதையும் சாப்பிட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement