உலகம்

விமானத்தின் உள்ளே கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த பெரும் விபரீதம்! அதிர்ச்சியில் அலறி ஓடிய பயணிகள்!

Summary:

luggage locker broken in flight

பிரேசிலின் ஸோ போலோவிலிருந்து, ஜெர்மனியின் பிராங்பேர்ட்க்கு அண்மையில் லாடம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் விமானம் தரையிரங்குவற்கு முன், விமானத்தில் பயன்கள் பொருட்களை வைக்கும் ஓவர் ஹெட் லாக்கர் என்ற பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பேனல் திடீரென்று உடைந்து கீழே விழுந்துள்ளது.

மேலும் விமானம் தரையிறங்கிய நிலையில், அந்த பேனல் விழுவதற்கு முன்பே பயணிகளின் பொருட்கள் அனைத்தும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டது. ஆனாலும் கீழே சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பயணியின் முகத்தில் பெரும் காயம் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியயுள்ளது.

மேலும் இது குறித்து விமானநிறுவனம் விளக்கம் அளிக்கையில்,  விமானம் தரையிரங்குவதற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் இதனால் யாருக்கும் பெரியபாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பயணிகள் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டனர். ஆனாலும் இந்த நிகழ்விற்காக வருத்ததை தெரிவித்து கொள்கிறோம். இனி இதுபோல் நடைபெறாது. பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்புடன் செய்து தருகிறோம் என கூறியுள்ளனர் .


 


Advertisement