ஐயோ... இத எப்படி சாப்பிடுறது? நூடுல்ஸ் பார்சலை பிரித்ததும் உயிருடன் துடி துடித்த எலிக்குட்டி! ஷாக்கிங் வீடியோ...!!!



live-rat-found-in-noodles-hong-kong-restaurant

ஹாங்காங்கின் குவாய் சங் பகுதியில் உள்ள ‘வா ஜெர்’ உணவகத்தில் வாங்கிய நூடுல்ஸ் பார்சலுக்குள் புதிதாகப் பிறந்த எலிக்குட்டி உயிருடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் உணவை திறந்தபோது இதைக் கண்ட பெண் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நூடுல்ஸ் பார்சலை திறந்தபோது அதிர்ச்சி

கடந்த திங்கள்கிழமை மதியம் பெண் ஒருவர் ‘சாடே பீப் நூடுல்ஸ்’ உள்ளிட்ட உணவுகளை அந்த உணவகத்தில் பார்சலாக வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்காக டப்பாவை திறந்தபோது, சாஸுக்கு நடுவே ரோமங்கள் கூட முழுமையாக வளராத சிறிய எலிக்குட்டி ஒன்று உயிருடன் கிடந்துள்ளது. அது கை, கால்களை அசைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முதலைக்கு முழு கோழியை உணவளிக்க சென்ற ஊழியர்! அடுத்த நொடி அவரையே இறையாக்கிய ராட்சத முதலை.. 1 மணி நேர மரண போராட்டம்! கடைசியில் சுட்டுக்கொன்று நடந்த அதிர்ச்சி... பகீர் வீடியோ!!!

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தனது கைபேசியில் வீடியோ பதிவு செய்தார். பின்னர் அதை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில், எலிக்குட்டி தொடர்பான காட்சிகள் வேகமாக பரவின. இதனால் உணவகங்களின் சுகாதாரத் தரம் குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தன.

உணவகத்தில் அதிகாரிகள் அதிரடி சோதனை

வாடிக்கையாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து ஹாங்காங் உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை அதிகாரிகள் உணவகத்திற்கு சென்றனர். உணவிலிருந்த எலிக்குட்டியையும் கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், உணவகத்தில் அடிப்படை உணவு சுகாதாரம் முறையாக பராமரிக்கப்படாததும், உணவு தயாரிப்பு தொடர்பான பணிகளில் அலட்சியம் இருந்ததும் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உணவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உணவு தயாரிக்கும் இடங்களில் சுகாதார விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: 12 குழந்தைகள்... 9 வயதில் தொடங்கி 9 ஆண்டுகள் நீடித்த கொடுமை! பெற்ற மகள்களையே சீரழித்த கணவன்! தூதுபோன தாய்..... அதிரவைக்கும் உண்மை பின்னணி!!!