கணவனுக்கு தெரியாமல் லாட்டரி ஷீட்டு வாங்கிய கேரளா பெண்! இறுதியில் நடந்த அதிசயம்!



Kerala kollam girl won 22 crore in lottery sheet in Abu dhabi

அபுதாபியில் கணவருக்கு தெரியாமல் லாட்டரி சீட்டு வாங்கிய கேரளாவை சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவருக்கு 22 கோடி ரூபாய் பரிசு விழுந்த சம்பவம் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கேரளாவில் உள்ள கொல்லத்தை பூர்விகமாக கொண்ட பெண் ஒருவர் அபுதாபியில் கணவருடன் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் நக்ஷத்திரா என்ற பெண் குழந்தை ஓன்று உள்ளது. ஒரு தனியார் கம்பெனியில் பொறியாளராக வேலைபார்த்து வந்த அந்த பெண் தனது கணவருக்கு தெறியாமல் லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார்.

அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு கடந்த வாரம் இந்திய மதிப்பில் சுமார் 22 கோடி பரிசு விழுந்துள்ளது. பரிசு விழுந்த பிறகே தான் லாட்டரி சீட்டு வாங்கியது குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார் அந்த பெண். மேலும், தங்கள் மகளின் அதிர்ஷ்டம்தான் எங்களது இந்த முன்னேற்றத்திற்கு காரணம் எனவும் கூறியுள்ளார் அந்த பெண்.

World news