அவன் என்னோட புருஷன்! நான் உயிரோட இருக்கும்போது எப்படி இன்னொரு கல்யாணம்? மண மேடையிலேயே மணபெண்ணை பொளந்து கட்டிய முதல் பொண்டாட்டி! பரபரப்பு வீடியோ.!!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி, திடீர் திருப்பத்தால் பரபரப்பாக மாறியது. போலீசாருடன் மண்டபத்திற்குள் வந்த பெண், மணமேடையிலேயே மணமகனை தனது கணவர் எனக் கூறி இரண்டாவது திருமண முயற்சியை எதிர்த்தார். இதையடுத்து அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
மணமேடையில் பரபரப்பை ஏற்படுத்திய முதல் மனைவி
கான்பூர் நகரின் சகேரி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சாஹனா ஹசன் என்ற பெண் காவல்துறையினருடன் நேராக மணமேடைக்குச் சென்று, மணமகனாக இருந்த ஆசிப் முகமதுவை சுட்டிக்காட்டி, தான் அவரது முதல் மனைவி என்றும், இன்னும் விவாகரத்து பெறாத நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார். அவரது பேச்சால் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: ஹோட்டலில் இளம்பெண்ணுடன் கணவன் போட்ட கும்மாளம்! கையும் களவுமாக பிடுத்த மனைவி... ஊராட்சித் தலைவரின் உல்லாச வீடியோ..!!!
காதல் திருமணத்திலிருந்து நீதிமன்றம் வரை
சாஹனாவின் தகவலின்படி, 2022-ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் ஆசிப் முகமதுவுடன் அறிமுகம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இரு குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணமும் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். ஆனால் 2024-ஆம் ஆண்டு ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி, விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. சாஹனா வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், ஆசிப் தம்பதியர் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்ததாகவும், அந்த வழக்கு இன்னும் நீதிமன்றம் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தப்பிச் செல்ல முயன்ற மணமகன்... போலீஸ் நடவடிக்கை
வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஆசிப் மற்றொரு திருமணம் செய்து வரவேற்பு நடத்துவதாக அண்டை வீட்டார் மூலம் தகவல் கிடைத்ததாக சாஹனா தெரிவித்தார். இதையடுத்து அவர் போலீசாருடன் மண்டபத்துக்குச் சென்று புதுப்பெண்ணிடம், தாங்கள் இன்னும் சட்டப்படி கணவன்-மனைவிதான் என்றும் இந்தத் திருமணத்தை அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதனால் மணமேடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆசிப் முகமது அங்கிருந்து வெளியேற முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக தலையிட்ட காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். வழக்கு நிலுவையில் இருந்தபோதும் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தத் திருமண முயற்சி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A Muslim man, identified as Aajib, was stopped from secretly marrying a second woman in Kanpur after his first wife arrived at the wedding venue and confronted him.
The wife was alerted by a neighbor, rushed to the venue with her sister, and halted the ceremony. pic.twitter.com/MCI4XBRtCm
— Pratham (@thepratham_in) July 27, 2026
🚨 First Wife Reaches Wedding Venue, Stops Husband’s Alleged Second Marriage in Kanpur pic.twitter.com/aF8b4xi2Ch
— Believer (@PredatorVolk) July 26, 2026