குழு குழு கூடாரத்தில் குஜால்.... இடமாற்றம் செய்தும் அடங்காத அட்டூழியம்! மனைவியின் அதிரடி என்ட்ரியில் சிக்கிய காவலர் ஜோடி..! வீதியில் நடந்த அடிதடி..!!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் திருமணமான காவலர் ஒருவர், பெண் காவலர் ஒருவருடன் கணவன்-மனைவியாக வசித்து வந்ததாக கூறப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை அறிந்த அவரது மனைவி குடும்பத்தினருடன் நேரில் சென்று இருவரையும் எதிர்கொண்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
பணியிடத்தில் தொடங்கிய பழக்கம்
தகவலின்படி, பிரதாப்கடில் பணியாற்றிய காலத்தில் காவலரும் பெண் காவலரும் அறிமுகமானதாக கூறப்படுகிறது. அவர்களது நெருக்கம் குறித்து அதிகாரிகள் எச்சரித்தும், இருவரும் தொடர்பை தொடர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் பெண் காவலர் ஹமீர்பூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகும், இருவரும் ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேரில் சென்று எதிர்கொண்ட மனைவி
இந்த தகவலை அறிந்த காவலரின் மனைவி, தனது குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினருடன் ஹமீர்பூரில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக இருந்ததை பார்த்த அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
விசாரணையில் காவல்துறை
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மனைவி தனது கணவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறை விசாரணை நடத்தினர். தனது கணவர் மற்றும் பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனைவி கோரிக்கை விடுத்திருந்தாலும், இதுவரை எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் பெறப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினருக்குள்ளேயே நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
सिपाही पति का पत्नी घर पर इंतज़ार करती थी लेकिन वह तो महिला कांस्टेबल के साथ उसके कमरे पर मच्छरदानी लगा कर ड्यूटी करता था.
महिला अपने सगे संबंधी और पुलिस लेकर महिला कांस्टेबल के कमरे पर पहुंच गयी, सिपाही पति को महिला कांस्टेबल के साथ रंगे हाथों पकड़ लिया.
📍 घटना हमीरपुर की… pic.twitter.com/ph8PNDMs31
— Shoonya (@Shoonya_ydv) July 6, 2026
இதையும் படிங்க: ஹோட்டலில் இளம்பெண்ணுடன் கணவன் போட்ட கும்மாளம்! கையும் களவுமாக பிடுத்த மனைவி... ஊராட்சித் தலைவரின் உல்லாச வீடியோ..!!!