"கொன்று புதைத்து விடுவேன்".. அடுத்தடுத்த சிக்கலில் சிக்கும் தவெக! அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆடியோ லீக்.... ஆக்ரோஷமான திமுக..!!!



minister-jagadeeswari-viral-audio-political-row

தமிழக சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுவதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மிரட்டல் பேச்சு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளன. இதேநேரத்தில், அந்த ஆடியோ பழையது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வைரலான ஆடியோவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உரையாடல்

சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோவில், தனது சட்டமன்றத் தொகுதிக்குள் மற்ற தொகுதியைச் சேர்ந்தவர்கள் வரக்கூடாது என்றும், அதை மீறுபவர்களை கொன்று புதைத்து விடுவேன் என்ற தோனியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாகக் கூறப்படுகிறது. ஒன்றிய செயலாளர் ராஜகுருவுடன் நடைபெற்றதாகச் சொல்லப்படும் அந்த உரையாடலில், சாத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது தொகுதியில் அதிகாரிகளைச் சந்திக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: வெளியான தவெகவின் ரகசிய ஆடியோ! 4.1 நிமிடத்தில் மொத்தமாக கொட்டி தீர்த்த விழுப்புர ஒன்றிய செயலாளர்! அடுத்து அரங்கேறிய அதிரடி ட்விஸ்ட்.!!!

அடுத்தடுத்த சர்ச்சைகளால் அரசுக்கு அழுத்தம்

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்று சில மாதங்களே ஆன நிலையில், அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் தொடர்ச்சியாக வெளிவந்து வருகின்றன. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தொடர்பான பழைய வீடியோக்கள், விஜய் பாலாஜியின் சர்ச்சை பேச்சு, கீர்த்தனாவின் ஆய்வு ரீல்ஸ் ஆகிய விவாதங்கள் அடங்குவதற்குள் இந்த வைரல் ஆடியோ புதிய அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதனால் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.

திமுக விமர்சனம்... மறுபுறம் விளக்கமும்

இந்த விவகாரத்தை திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளது. மக்கள் நலனைக் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் மிரட்டல் விடுப்பது சட்டம்-ஒழுங்கு மீதான நம்பிக்கையை பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளையில், விருதுநகர் பகுதி மற்றும் கட்சி வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்களின்படி, தற்போது பரவி வரும் ஆடியோ அமைச்சர் ஜெகதீஸ்வரி அமைச்சராவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட பழைய உரையாடல் என்றும், அதில் எதிர்முனையில் பேசிய நபர் அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. எனினும், ஆடியோவின் உண்மை தன்மை குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகாத நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வு.... இரவோடு இரவாக தவெகவில் இணைந்த முக்கிய புள்ளி! அடுக்கடுக்காக சரியும் அதிமுக! அதிர்ச்சியில் எடப்பாடி...!!!