மரண படுக்கையில் இருந்த தாய் மகளிடம் கேட்ட கடைசி ஆசை! மருத்துவமனையிலேயே நிறைவேட்றிய மகள்... அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி...! கதறி அழுது மகள் சொன்ன அந்த வார்த்தை...!!!



florida-mother-last-wish-daughter-icu-wedding

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், புற்றுநோயால் ICU-வில் சிகிச்சை பெற்று வந்த 81 வயது பெண்ணின் கடைசி ஆசையை அவரது மகள் நிறைவேற்றிய நெகிழ்ச்சியான நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. டோன்னா கம்மிங்ஸ், தனது மகள் கேமி கம்மிங்ஸ், அவரது காதலர் சேண்டி ஆடம்ஸை திருமணம் செய்து கொள்வதை பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இதையடுத்து, தாயின் ICU படுக்கை அருகிலேயே கேமி தனது காதலரை திருமணம் செய்துகொண்டார்.

ICU அறையிலேயே நடந்த திருமணம்

Stage 4 கல்லீரல் புற்றுநோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டோன்னாவின் உடல்நிலை மோசமடைந்திருந்தது. தனது மகளின் திருமணத்தை காண வேண்டும் என்ற ஆசையை அவர் வெளிப்படுத்திய நிலையில், அதை தாமதிக்காமல் நிறைவேற்ற கேமியும் சேண்டியும் முடிவு செய்தனர்.

இதையும் படிங்க: என்ன ஒரு கேடித்தனம்...! அமெரிக்க அரசை ஏமாற்றி ரூ.800 கோடி அபேஸ்...! இந்திய வம்சாவளி நபரின் பகீர் மோசடி!!!

இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் ICU அறை சிறிய திருமண நிகழ்வுக்கு ஏற்ற வகையில் அலங்கரிக்கப்பட்டது. கேக், பானங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளுடன் நெருங்கிய குடும்பத்தினர் பங்கேற்ற சிறிய விழாவும் அங்கே நடைபெற்றது. தாயின் படுக்கைக்கு அருகிலேயே கேமி மற்றும் சேண்டி திருமணம் செய்து கொண்டனர்.

“அவர் எங்கள் திருமணத்தை பார்க்க வேண்டும்”

தனது தாயார் சேண்டியை எப்போதும் தனது தேவதை என்று அழைப்பார் என கேமி தெரிவித்துள்ளார். தாம் திருமணம் செய்து கொள்வதை நேரில் பார்க்க வேண்டும் என்பதே தாயின் ஆசையாக இருந்ததால், ICU-விலேயே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார்.

“எங்கள் குடும்பத்திற்காக என் தாயார் பல தியாகங்களை செய்துள்ளார். அவரது இறுதி நாட்களில் அவரை மகிழ்விக்க என்னால் செய்ய முடிந்த சிறந்த விஷயம் இதுதான்” என்று கேமி உருக்கமாக தெரிவித்துள்ளார். தாயின் கடைசி ஆசை நிறைவேறிய அந்த தருணம் குடும்பத்தினருக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

திருமணத்துக்குப் பிறகு உயிரிழந்த தாய்

திருமண நிகழ்ச்சி முடிந்த பின்னர், டோன்னா ICU-வில் உயிரிழந்தார். தனது தாய் தற்போது வலியின்றி அமைதியாக இருப்பதாக கேமி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கேமி மற்றும் சேண்டி வரும் ஏப்ரல் மாதத்தில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் பெரிய அளவில் திருமண விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தாயின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட மகளின் இந்த செயல், ICU திருமணம் தொடர்பான நெகிழ்ச்சியான கதையாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: அந்த குழந்தை என்ன தப்பு பண்ணுச்சு...! எப்படி ஒரு பேச்சு....? தாய் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கணவரை பழிவாங்க 3 வயது மகனை சித்திரவதை... அதிர்ச்சி வீடியோ!!!