வெளியான தவெகவின் ரகசிய ஆடியோ! 4.1 நிமிடத்தில் மொத்தமாக கொட்டி தீர்த்த விழுப்புர ஒன்றிய செயலாளர்! அடுத்து அரங்கேறிய அதிரடி ட்விஸ்ட்.!!!
தமிழக வெற்றிக் கழக தலைவர் ச. ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற மறுநாளே, கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. விழுப்புரம் மாவட்ட வாட்ஸ்-அப் குழுக்களில் வேகமாக பரவி வரும் அந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
சுமார் 4.1 நிமிடங்கள் ஓடும் அந்த ஆடியோவை, கட்சியின் சில நிர்வாகிகளே ஊடக அலுவலகங்களுக்கும் பகிர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பேசுபவர் தவெக விழுப்புரம் தெற்கு மாவட்டம், கோலியனூர் கிழக்கு ஒன்றியச் செயலாளரான மைக்கேல் அந்தோணிராஜ் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்....அதிமுக- தவெக கூட்டணியா? அதிகாரப்பூர்வ விளக்கம்....தவெக பொதுச்செயலாளரின் அதிரடி அறிவிப்பு!!!
தவெக-வில் அதிகரிக்கும் இணைப்பு?
ஆடியோ பதிவில், கடந்த ஒரு வாரமாக மாற்றுத் திறனாளிகள் உட்பட பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் தவெக கட்சியில் இணைந்து வருவதாக மைக்கேல் அந்தோணிராஜ் தெரிவித்துள்ளார். புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து ஏற்பட்ட இந்த நிலை, விழுப்புரம் மாவட்ட அரசியல் சூழலில் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சியில் புதிதாக சேருபவர்கள் மாவட்ட நிர்வாகிகளிடம் பணம் கொடுத்து தான் இணைந்ததாக சிலர் அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் கட்சித் தொண்டர்களிடையே தேவையற்ற குழப்பம் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு கிராமங்களில் பரபரப்பு
கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டு கிராமங்களில் இந்த விவகாரம் தற்போது பெரிதாக பேசப்பட்டு வருவதாகவும், பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அந்த ஆடியோவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்பின், கட்சியின் ஆரம்ப காலம் முதலே உழைத்து வரும் பழைய நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார் எனவும், அனைவரும் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த ஆடியோ வெளியான பிறகு, விஜய் தலைமையிலான புதிய அரசின் பின்னணியில் தவெக அமைப்பு வளர்ச்சி மற்றும் கட்சிக்குள் நிலவும் சூழல் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. எனினும், ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து கட்சி தலைமையிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.