26 வயதிலேயே ரூ.1 கோடி இலக்கை அடைந்த இளைஞர்! ஆனால் அவர் பட்ட வேதனையை பகிர்ந்து சொன்ன அதிர்ச்சி அனுபவம்.... பணமே பைத்தியக்காரனாக மாற்றிய தருணம்!!!
26 வயதிலேயே ரூ.1 கோடி நிதி இலக்கை எட்டிய இந்திய இளைஞரின் பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. வெளிநாட்டு நிதி, மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், பிபிஎஃப், தங்கம் உள்ளிட்ட முதலீடுகள் மூலம் அவர் இந்த இலக்கை அடைந்துள்ளார். ஆனால், பணத்தை சேர்த்த விதத்தில் சந்தித்த மன அழுத்தத்தையும் அவர் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
பல முதலீடுகள் மூலம் ரூ.1 கோடி இலக்கு
26-வது வயதிலேயே ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கில் அவர் தொடர்ந்து சேமித்து முதலீடு செய்து வந்துள்ளார். பல்வேறு முதலீட்டு வழிகளைப் பயன்படுத்தியதன் மூலம் எதிர்பார்த்த நிதி இலக்கை அடைந்ததாக தனது Reddit பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் பணத்தை சேமிப்பது நல்ல பழக்கமாக இருந்ததாக கூறும் அவர், ஒரு கட்டத்தில் அது தன்னை விட்டு விலக முடியாத பழக்கமாக மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஏதாவது பொருளை வாங்க நினைத்தால்கூட, அதற்காக செலவு செய்வதைவிட அந்தப் பணத்தை முதலீடு செய்திருக்கலாம் என்ற எண்ணம் தொடர்ந்து மனதில் தோன்றியதாக தெரிவித்துள்ளார்.
சேமிப்பே மன அழுத்தமாக மாறிய தருணம்
இதனால் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் குற்ற உணர்வு ஏற்பட்டதாகவும், பணம் செலவிடும் ஒவ்வொரு முறையும் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வாழ்க்கையின் பெரும்பகுதி எக்செல் ஷீட்டுகள், கணக்குகள் மற்றும் முதலீட்டு திட்டங்களைச் சுற்றியே சென்றுவிட்டதாகவும் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பண சேமிப்பு என்பது வாழ்க்கையை எளிதாக்குவதற்குப் பதிலாக மனதில் அழுத்தத்தை உருவாக்குவதை உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து பணத்தின் மீதான தனது அணுகுமுறையை மாற்றிப் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பணம் ஒரு கருவி; இலக்கு அல்ல
பணம் என்பது வாழ்க்கையில் அமைதியையும் சுதந்திரத்தையும் உருவாக்குவதற்கான ஒரு கருவி மட்டுமே என்றும், அதை வீடியோ கேமில் அதிகபட்ச புள்ளிகளை பெறுவது போல பார்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சேமிப்புக்கு இணையாக, தேவையான நேரத்தில் மனசாட்சிக் குற்ற உணர்வு இல்லாமல் பணத்தை சரியான முறையில் செலவிடுவதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது பதிவின் முக்கிய கருத்தாக உள்ளது.
நிதி சுதந்திரம் என்ற இலக்கை அடைவதுடன், அந்தப் பயணத்தில் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் சமநிலையையும் இழக்காமல் இருப்பது அவசியம் என்ற அவரது கருத்து Reddit பயனர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பணம் சேர்ப்பது மட்டுமல்லாமல், அதை எப்போது எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதும் நிதி திட்டமிடலில் முக்கியமான பகுதி என்பதை அவரது அனுபவம் பேசுகிறது.