கல்லூரிக்கு போவதாக சொல்லி ஓயா விடுதிக்கு போன 19 வயது மாணவி! சிறிது நேரத்திற்கு பிறகு அறையிலிருந்து தனியாக வெளியேறிய காதலன்! கதவைத் திறந்து பார்த்த ஊழியர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. கதறி அழும் தந்தை..!!!
டெல்லியில் கல்லூரிக்குச் செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்ட 19 வயது மாணவி, தனியார் விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். காதலனுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவி, சில மணி நேரங்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் . மாணவியின் மரணம் குறித்து அவரது தந்தை காதலன் மீது குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே, அந்த இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்லூரிக்குச் சென்ற மாணவி விடுதி அறையில் உயிரிழப்பு
டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 19 வயது மாணவி, வழக்கம்போல காலை 9 மணியளவில் கல்லூரிக்குச் செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், கல்லூரிக்குச் செல்லாமல் தனது காதலனுடன் சேர்ந்து தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து அந்த இளைஞர் மட்டும் விடுதி அறையிலிருந்து வெளியேறியுள்ளார். மாணவி அறையை விட்டு வெளியே வராததால் விடுதி ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சில மணி நேரம் காத்திருந்த அவர்கள் அறையின் கதவைத் திறந்து பார்த்தபோது, மாணவி வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
காதலன் மீது தந்தை குற்றச்சாட்டு
மாணவி உயிரிழந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது தந்தை, மகளின் மரணத்திற்குக் காதலன்தான் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே, மாணவி உயிரிழந்தது குறித்து தகவல் வெளியானதிலிருந்து அந்த இளைஞர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவி உயிரிழந்ததற்கான காரணம் என்ன என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கைகள் வெளியாகும் நிலையில், மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.
திருமண வயது குறித்த விவாதம்
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு, உறவுகளில் விழிப்புணர்வு மற்றும் பெற்றோரின் கவனம் குறித்து பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையே, இந்தியாவில் திருமண வயது வரம்பைக் குறைப்பது குறித்த கருத்துகளும் சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், மாணவியின் மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படாத நிலையில், விசாரணையின் முடிவே இந்த விவகாரத்தில் தெளிவை ஏற்படுத்தும்.