ஐயோ.. நீங்க வேகமா ஓட்டுனதுக்கு அவுங்களுக்கு சாவா ..? 13 வயது சிறுவர்கள் ஓட்டிய கார்..! பரிதாபமாக பறிபோன ஏழைத் தொழிலாளியின் உயிர்..! 25 கொடுத்து சமரசம் செய்ய முயற்சி..? குலை நடுங்க வைக்கும் காட்சி!!!!
பாகிஸ்தானின் லாகூரில் 13 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஓட்டிச் சென்ற கார் மோதி கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டி.ஹெச்.ஏ. பேஸ் 3 பகுதியில், பேக்கேஜஸ் மால் பின்புறம் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றொருவர் படுகாயமடைந்தார். அவருக்கு முதுகுத்தண்டில் ஏற்பட்ட பாதிப்பால் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிவேகமாக வந்த கார்.. ஒருவர் உயிரிழப்பு
லாகூரின் டி.ஹெச்.ஏ. பேஸ் 3 பகுதியில் சிறுவர்கள் ஓட்டிச் சென்ற கார் அதிவேகமாக வந்தபோது, சாலையில் சென்றவர்கள் மீது மோதியது. இதில் கூலித் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற மற்றொருவர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதுகுத்தண்டில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக அவருக்கு நீண்டகால பாதிப்பு அல்லது வாழ்நாள் முழுவதும் உடல் ஊனம் ஏற்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.
ரூ.25 லட்சம் கொடுத்து சமரசம் செய்ய முயற்சியா?
ஒரு உயிர் பறிபோன நிலையில், வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துக்கொள்ள சுமார் ரூ.25 லட்சம் கொடுத்து சமரசம் செய்ய முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
13 வயதுச் சிறுவர்களிடம் வாகனத்தை ஒப்படைத்தது யார், அவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளித்தது எப்படி என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பண பலத்தைக் கொண்டு சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியுமா என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
பெற்றோர் பொறுப்பு குறித்து எழும் கேள்விகள்
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. வாகனத்தை சிறுவர்களிடம் ஒப்படைக்கும் பெற்றோர் மற்றும் பொறுப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்.
சட்டத்தின் ஆட்சி உறுதி செய்யப்படுவதுடன், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாலைகளில் பயணிக்கும் சாமானிய மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் எழுந்துள்ள முக்கிய கோரிக்கையாக உள்ளது.
لاہور کے علاقے ڈی ایچ اے فیز 3 (پیکجز مال کے عقب) سے سامنے آنے والی یہ ویڈیو ہے اطلاعات کے مطابق 13 سے 14 سال کے کم عمر بچوں کی تیز رفتاری نے ایک محنت کش کی جان لے لی، جبکہ دوسرا موٹر سائیکل سوار شدید زخمی حالت میں آئی سی یو میں زیرِ علاج ہے اور ریڑھ کی ہڈی کی چوٹ کے باعث عمر… pic.twitter.com/IWO7cUtklz— Nuqta e Nazar – نقطۂ نظر (@fizimughal) November 24, 2026
இதையும் படிங்க: நடுங்க வைக்கும் காட்சி! பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறிய எரிவாயுக் குழாய்! அலறியடித்து ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ..!!!