சிறு வயதுதானேன்னு அசால்ட்டா இருக்காத்தீங்க... உங்கள் குழந்தையின் உடல் எடையை கவனிச்சீங்களா? இந்த ஆபத்தில் இருந்து எல்லாம் தப்பிக்க இதுதான் வழி..!!!.
இன்றைய வாழ்க்கை முறையில் குழந்தைகளிடம் அதிகரித்து வரும் உடல் பருமன் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான ஆரோக்கியச் சவாலாக மாறியுள்ளது. சிறு வயதிலேயே அதிகரிக்கும் உடல் எடை, எதிர்காலத்தில் நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு காரணமாக அமையக்கூடும் என்பதால், ஆரம்ப நிலையிலேயே சரியான பழக்கங்களை உருவாக்குவது அவசியம் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உணவுப் பழக்கத்தில் மாற்றம் அவசியம்
குழந்தைகளின் எடையைக் கட்டுப்படுத்த முதலில் அவர்களின் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். பாக்கெட் உணவுகள், நொறுக்குத் தீனிகள், துரித உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கலந்த குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக தினசரி உணவில் காய்கறிகள், புதிய பழங்கள், நட்ஸ் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்தையும் சீரான வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
இதையும் படிங்க: ஓ.. இதுதானா! ஆண்களின் வயிறு பெருதாவதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா? இனி கவனமா இருங்க...
தினமும் ஒரு மணி நேரம் உடல் இயக்கம்
செல்போன், டிவி போன்ற திரை சாதனங்களில் அதிக நேரம் செலவிடுவதால் குழந்தைகளின் உடல் இயக்கம் குறைந்து வருகிறது. இதனால், தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஓடிப்பிடித்து விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது விருப்பமான விளையாட்டுகளில் ஈடுபட பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். இதுபோன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை கலோரிகளை எரிக்கவும் உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
உறக்கமும் தண்ணீரும் முக்கிய பங்கு
போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், வயதுக்கேற்ற அளவில் தினசரி உறங்குவதும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். குறிப்பாக இரவு நேரங்களில் செல்போன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, சரியான நேரத்தில் தூங்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். உணவு, உடற்பயிற்சி, உறக்கம் ஆகிய மூன்றையும் சமநிலையாகப் பின்பற்றினால் குழந்தைகளின் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, எதிர்கால ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்.
இதையும் படிங்க: நல்ல தூக்கத்தையும் உடல் நலத்தையும் பெற வேண்டுமா? இதோ இந்த 10-3-2-1 ரகசியத்தை உடனே செய்யுங்க...அடுத்து நடக்கும் மேஜிக்கை பாருங்க!!!