நல்ல தூக்கத்தையும் உடல் நலத்தையும் பெற வேண்டுமா? இதோ இந்த 10-3-2-1 ரகசியத்தை உடனே செய்யுங்க...அடுத்து நடக்கும் மேஜிக்கை பாருங்க!!!



10-3-2-1-sleep-rule-interval-walking-health-benefits

இன்றைய வேகமான டிஜிட்டல் வாழ்க்கையில் நிம்மதியான உறக்கம் பலருக்கும் சவாலாகி வருகிறது. இதற்கிடையில், உலகளவில் பரவலாக பேசப்படும் ’10-3-2-1′ தூக்க விதியும் ஜப்பானிய நடைப்பயிற்சி முறையும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு புதிய வழி காட்டுகின்றன. குறைந்த நேரத்தில் உடல் புத்துணர்ச்சி பெற இந்த இரண்டு முறைகளும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன.

10-3-2-1 தூக்க விதி என்ன?

நல்ல உறக்கத்தைப் பெற இந்த விதி எளிமையான வழிகாட்டுதலை வழங்குகிறது. தூங்குவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே காஃபின் பானங்களை தவிர்க்க வேண்டும். 3 மணி நேரத்திற்கு முன்பே உணவை முடிக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே வேலைகளை நிறுத்தி மனதை ஓய்வுக்கு தயார் செய்ய வேண்டும். மிக முக்கியமாக, 1 மணி நேரத்திற்கு முன்பே மொபைல் மற்றும் டிவி போன்ற சாதனங்களை விலக்க வேண்டும்.

இந்த நடைமுறை மூளையில் மெலடோனின் சுரப்பை சீராக்கி, ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, 10-3-2-1 sleep rule பின்பற்றுபவர்கள் அதிக சுறுசுறுப்புடன் அடுத்த நாளை தொடங்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: உங்கள் துணையுடன் நீண்ட நேரம் உடலுறவில் இருக்கணுமா! அப்போ இத ட்ரை பண்ணுங்க.....

ஜப்பானிய Interval Walking முறை

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜப்பானில் உருவான ‘Interval Walking Training’ தற்போது உலகம் முழுவதும் கவனம் பெறுகிறது. ஷின்ஷு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்த இந்த முறை, வெறும் 30 நிமிடங்களில் பயனளிக்கிறது.

இதில் 3 நிமிடங்கள் வேகமாக நடப்பதும், அடுத்த 3 நிமிடங்கள் மெதுவாக நடப்பதும் மாறி மாறி செய்யப்படுகிறது. இந்த 3:3 சுழற்சியை தினமும் ஐந்து முறை செய்தால், சாதாரண நடைப்பயிற்சியை விட அதிக பலன் கிடைக்கும். இதனால் இதய துடிப்பு, ரத்த ஓட்டம் மேம்படுவதுடன், Interval Walking தசை வலிமையையும் அதிகரிக்கிறது.

வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம்

உணவு பழக்கத்துடன் மட்டுமல்ல, வாழ்வியல் முறையிலும் மாற்றம் கொண்டு வருவது முக்கியம். இரவு நேரத்தில் தூக்க விதியை பின்பற்றுவதும், காலை அல்லது மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்வதும் உடலை சீராக வைத்திருக்க உதவுகிறது.

தகவலின்படி, இந்த இரண்டு எளிய பழக்கங்களையும் தினசரி வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டால் மன அழுத்தம் குறையும். மேலும், நீண்ட கால ஆரோக்கியத்திற்கான அடித்தளமும் வலுவாகும் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

இதையும் படிங்க: மாரடைப்பு பயமா? இளமையிலே வரும் மாரடைப்பை தவிர்க்க என்ன செய்யவேண்டும்?